கர்ப்பிணி உடம்பில் துணியில்லாமல்.. மணிப்பூரிலும் இப்படித்தான் ஆச்சு.. கொதித்த கோர்ட் - பரபர தீர்ப்பு
காந்திநகர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவத்தில், குஜராத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருக்கிறது.. இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. கிராம பஞ்சாயத்துக்களே தீர்ப்பை சொல்கின்றன. சில கொடூர தீர்ப்புகளுக்கு, அந்தந்த கிராம மக்கள் அப்படியே கட்டுப்படுகிறார்கள்.
கடந்த வாரம்கூட, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்தது. பிரதாப்கரின் சோட்கி இப்ராஹிம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள்.. குழந்தைகள் கண்முன்னேயே மரத்தில் கட்டிவைத்து செருப்பு மாலையும் அணிவித்து, முகத்தில் கருப்பு மை பூசி, தலைமுடியையும் வெட்டியிருக்கிறார்கள்..
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை தந்திருந்தது. அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும், கடந்த வருடம் ஒரு கொடுமை நடந்தது.. பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த நபரிடம் திருமணம் மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அப்பெண் கர்ப்பமாகி இருக்கிறார்.
கள்ளக்காதலன்: கடந்த வருடம் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது, இந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.. செப்டம்பர் 1-ம் தேதி, தன்னுடைய கள்ளக்காதலனை பார்ப்பதற்காக கர்ப்பிணி சென்றிருக்கிறார்..
ஆனால், இந்த விஷயம், அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்துவிட்டது.. இதனால் ஆத்திரமடைந்த கணவர், கர்ப்பிணி மனைவியை தரதரவென்று ரோட்டிலிருந்து வீட்டிற்குள் இழுத்து வந்து கடுமையாக துன்புறுத்தி தாக்கியிருக்கிறார். மேலும், பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணப்படுத்தி, சாலையில் ஊர்வலமாகவும் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
17 பேர் கைது: இதனால், பாதிக்கப்பட்ட பெண் நேராக போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. போலீசாரும் இது தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, ராஜஸ்தான் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்கன்யா சோனி, "இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக கடுமையான குற்றம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் இப்படித்தான் கொடூரமான குற்றம் நடந்தது. இத்தகைய குற்றங்கள் பெண்களின் மனதை புண்படுத்தும்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை.. அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
அதிரடி தண்டனை: நம்முடைய நாட்டில் பெண்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்றனர்... பழங்கால சாஸ்திரங்களில் பெண்கள் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.. ஆனாலும் பெண்கள் மீதான வன்முறையும் அட்டூழியங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.. கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய வழக்கில் 14 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது" என்று அதிரடியாக தீர்ப்பு தந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications