ஆஹா, இவரல்லவோ மனைவி.. பக்கத்து வீட்டுக்காரரிடம்.. அந்த "மெசேஜ்" பார்த்ததுமே.. போலீசுக்கு ஓடிய கணவன்
போபால்: 'இளம் மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.. இப்போது அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்ன காரணம்?
உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. மத்தியபிரதேசத்தின் பிந்த் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.. ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்தே 2 பேருக்குமே ஒத்துவரவில்லை.. கொஞ்ச நாட்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும், சண்டைகளும் வெடிக்க துவங்கின.

தகராறுகள்: எப்போதுமே வீட்டில் தகராறுகள் வெடித்து வந்ததால், மனைவி நொந்து போனார்.. கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமே கிடைக்கவில்லையே என்று நொந்து போனார்..
அதனால், கணவருடன் ஒரேவீட்டில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட, அவரை பிரிந்துவிடுவது மேல் என்று முடிவெடுத்தார். எனவே, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கணவரை விட்டுப்பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கே அந்த பெண் சென்றுவிட்டார்.
பராமரிப்பு: அத்துடன், கணவரிடம் விவாகரத்து கேட்டார்.. முறையான விவாகரத்து தனக்கு கிடைக்கும்வரை, தன்னுடைய பராமரிப்பு தொகையையும் கணவர் வழங்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார்.
கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி, கோபம் தணிந்து திரும்ப வந்துவிடுவார் என்று காத்திருந்த கணவனுக்கு, மனைவியின் விவாகரத்து முடிவு கடும் அதிர்ச்சியை தந்தது.. இதனால், மனைவி மீதான ஆத்திரமும் இரட்டிப்பானது. எனினும், நேரில் பேசி மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர எண்ணி, மாமியார் வீட்டுக்கு போனார்.
மாமியார்: அங்கே மாமியார் வீட்டுக்குள் நுழைந்ததுமே கணவருக்கு தலையே சுற்றிவிட்டது.. பக்கத்து வீட்டுக்காரருடன், மனைவிக்கு உறவு இருப்பது தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், இந்த கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கேட்கப்போய், மாமியார் வீட்லிருந்தவர்கள் கொந்தளித்து, கணவனை தாக்க வந்துவிட்டார்களாம்.
எனவே, போலீசில், மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் குறித்து புகார் செய்துள்ளார் கணவர். கல்யாணத்துக்கு முன்பிருந்தே, பக்கத்து வீட்டுக்காரருடன் உறவு இருந்ததால்தான், தன்னிடம் மனைவி சரியாக வாழாமல், வேண்டுமென்றே தகராறு செய்து வந்ததாகவும், போலீசில் புகார் தந்தார்.
ஆவேசம்: கணவன் போலீசுக்கு சென்று தன்மீது புகார் தந்ததுமே மனைவி ஆவேசமாகிவிட்டார்.. உடனே தன்னுடைய வாட்ஸ்அப்பில், ஸ்டேட்டஸ் வைத்துவிட்டார்.. "என்னுடைய கணவரை கொல்பவருக்கு, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை ஸ்பாட்டிலேயே வழங்கப்படும்" என்று அறிவித்தார்.. இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்த கணவர் உக்கிரமாகிவிட்டார்..
மறுபடியும் போலீசுக்கு ஓடிச்சென்று முறையிட்டார். ஒவ்வொருமுறையும் இந்த தம்பதிகள் மாறி மாறி தரும் புகார்களை போலீசார் கண்டுகொள்ளாமலேயே இருந்தார்களாம்.. ஆனால், இந்த முறை, கொலை செய்யும் வரை மனைவி விபரீதமாக யோசிப்பதால், போலீசார் மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம்..
சமாதானம்: அதுமட்டுமல்ல, இவர்களை சமாதானப்படுத்தி ஒன்றுசேர்க்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கியிருப்பதால், தம்பதி குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்களாம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications