இன்போசிஸ் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த விஷால் சிக்காவின் பின்னணி என்ன?
இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் ஷிக்கா ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் ஷிக்கா ராஜினாமா செய்துள்ளார். யார் இந்த விஷால் சிக்கா, அவர் எப்படி மென்பொருள் உலகின் சக்திமிகுந்த நபராக வளர்ந்தார் என்ற விவாதம் இணையதள வாசிகள் மத்தியில் நடந்து வருகின்றன.
இந்திய அமெரிக்கரான விகாஷ் ஷிக்கா 2014ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னர் சாப் நிறுவனத்தில் மொபைல், அனலட்டிக்ஸ், மற்றும் க்லவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளில் முக்கிய மாற்றங்களுக்கு காரணமானவராக விஷால் சிக்கா என்கிறார்கள் மென்பொருள் வல்லுநர்கள்.

விஷால் ஷிக்கா பிறப்பால் இந்தியர். பள்ளி, கல்லூரி படிப்புகளை குஜராத் மாநில பரோடாவில் பயின்றுள்ளார். இவரின் தந்தை இந்திய ரயில்வே துறை அதிகாரி.
பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பெற்ற ஷிக்கா, ஷிராகஸ் பல்கலையில் உயர்படிப்பு படித்து, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் வாங்கினார். அதன்பிறகு 'சிலிக்கான் வேலி' சென்ற அவர் கணினி மென்பொருள் உலகின் பிரபலமானார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சேரும் முன்பாக, அவர், எஸ்ஏபி ஏஜி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சிடிஓ ஃபாரம், காக்ஹெட், ஸ்டீவ் போர்ன், கய் கவாஸாகி, ஜான் சீலி பிரவுன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் ஷிக்கா பணிபுரிந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications