ஆன்டிபயாட்டிக்குக்குக் கட்டுப்படாத நோய்கள் அதிகரிப்பு... உலக சுகாதார நிறுவனம் கவலை!

இந்த வகையான நோய்களும், பாக்டீரியாக்களும் அதிகரித்து வருவது தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பெரும் பொது சுகாதார மிரட்டலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் நடந்த ஆன்ட்டிமைக்ரோபியர் ரெசிஸ்டென்ஸ் (ஏஎம்ஆர்) தொடர்பான நான்கு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய ஹூ அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் பேசுகையில்...
பாதிப்பு...
‘நாம் அவசரமாக செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. உலகம் தற்போது ஆன்டிபயாட்டிக்குகளுக்கு பிந்தைய காலத்திற்கு வந்துள்ளது. இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சரியான முடிவெடுக்க வேண்டும்...
நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரிவர பயன்படுத்தாவிட்டால், சாதாரண காயங்கள், பொதுவான தொற்றுநோய்களிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்படும். எனவே எப்படிப்பட்ட ஆன்டிபயாட்டிக்குகளை நாம் பயன்படுத்துவது, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
நடவடிக்கைகள்...
கடந்த 2010ம் ஆண்டிலிருந்தே இதுகுறித்த நடவடிக்கைகளை ஹூ அமைப்பு தொடங்கி விட்டது. அதன்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பயன்பாட்டை ஸ்திரப்படுத்துவது, நிலைப்படுத்துவது, முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரம்...
மேலும் மக்கள் மத்தியில் சாதாரண தொற்று நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துவது குறித்த முக்கியத்துவம் குறித்தும் அது பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
பிரகடனம்...
தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முறைகளை உருவாக்குவது குறித்தும் ஜெய்ப்பூர் மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும் மாநாட்டின் நிறைவாக ஆன்டிபயாட்டிக்குகள் தொடர்பான ஜெய்ப்பூர் பிரகடனமும் வெளியிடப்படவுள்ளது.
கால்பங்கு மக்கள்...
உலக மக்கள் தொகையின் கால் பங்கு தென் கிழக்கு ஆசியாவில்தான் உள்ளது. எனவே இங்கு ஹூ அமைப்பு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
9 வகைப் பாக்டீரியாக்கள்...
தற்போது உலக அளவில் 9 வகையான பாக்டீரியாக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியப் பிரச்சினைகள்...
இவை செப்ஸிஸ், வயிற்றுப் போக்கு, நிமோனியா, சிறுநீர்ப் பாதை தொற்று, கொனோரியா ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக இந்த நோய் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications