ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலை இயக்கிய பைலட்கள் யார்? என்ன ஆனார்கள்? திடுக்கிடும் தகவல்கள்
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி விசாரணை நடத்தினார். அத்துடன் ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களை இயக்கியவர்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த பெங்களுருவில் ஹவுரா நோக்கி வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதற்கட்டமாக விபத்து குறித்து வெளியான தகவலின் படி, பாய்ண்ட் 17 ஏ மாறாததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மொத்தம் 55 பேர் இந்த விபத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விபத்துக்கு முன்பாக அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கியவர்கள் ஊழியர்கள் உள்பட மொத்தம் 55 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் லோகோ பைலட் ஜி.என். மோஹான்டி, துணை லோகோ பைலட் ஹெஜாரி பெஹேரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு-ஹவுரா லோகோ பைலட் சித்தரஞ்சன், துணை லோகோ பைலட் சுதீர்குமார் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் விபத்தில் சிக்கிய சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் மற்றும் பாஹனா பஜார் சிக்னல் பராமரிப்பு பொறியாளர் அவினாஸ் மோகன்ஜி, ஒப்பந்த வயரிங் பணியாளர் ரவீந்திரநாத் தாஸ்மால், உதவியாளர் பிரசாந்த் ராஜூ ஆகியோருக்குதென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதனிடையே கோரமண்டல் லோகோ பைலட் குணதி மோஹான்டி, துணை லோகோ பைலட் ஹெஜாரி பெஹேரா மற்றும் பெங்களூரு-ஹவுரா லோகோ பைலட் சித்தரஞ்சன், துணை லோகோ பைலட் சுதீர்குமார் ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களது உடல் நிலை சீராக உள்ளது. கோரமண்டல் உதவி லோகோ பைலட்டுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி விசாரணை குறித்து பேசும் போத, "நாங்கள் ரயில் ஓட்டுநரிடம் பேசினோம், அவர் சிக்னல் பச்சை நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். எங்கள் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். சிக்னல் சிவப்பு நிறமாக இருந்தால் அவர் கடந்து சென்றிருக்க மாட்டார். அதேபோல் அதிக வேகத்தில் செல்லவில்லை. ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிக்னல் பச்சை நிறத்தில் தான் இருந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே சென்றுள்ளார். அதிபட்ச வேக அனுமதி (130 கிமீ/மணிக்கு அனுமதிக்கப்பட்டது) மற்றும் ரயில் ஓட்டுநர் மணிக்கு 128 கிமீ வேகத்தில் இருந்தார்" என்று சின்ஹா கூறினார்.
இதனிடையே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 55 பேரில் எத்தனை பேர் ஆஜரானார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. தேவை ஏற்பட்டால் இன்னும் சில நாட்கள் கூட விசாரணை தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications