Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரு கட்டங்களாக நடக்கும் பீகார் தேர்தல்.. "பாஜக vs ஆர்ஜேடி.." இதில் எந்த கட்சிக்கு உண்மையில் லாபம்?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த முறை 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவது பீகாரில் யாருக்கு லாபமாக இருக்கும். அங்குள்ள அரசியல் கட்சிகளின் வியூகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்குள்ள சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில், அதற்குள் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். இதற்கிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Who will be benefited from two phase election in Bihar face off between NDA vs Mahagathbandhan

பீகார் தேர்தல்

அதன்படி பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பொதுத் தொகுதிகளின் எண்ணிக்கை 203ஆக உள்ளது. மேலும், பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் 38ஆகவும், பழங்குடியின பிரிவினருக்கான தொகுதிகள் 2 ஆகவும் உள்ளன. முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி

பீகாரில் மக்கள் எளிதாக வாக்களிக்க மொத்தம் 90,712 வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு 1200 பேருக்கு ஒரு தொகுதி என்ற ரேஞ்சில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை 1500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 1200க்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 7.43 கோடியாக உள்ளது. அதில் குறிப்பாக 14 லட்சம் வாக்காளர்கள் இப்போது தான் முதல்முறை வாக்களிக்கும் இளம் தலைமுறையினராக உள்ளனர்.

அங்கு இந்த முறை இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களாகவே தேர்தல் நடந்துள்ளன. 2010ல் 6 கட்டங்களாகவும், 2015ல் 5 கட்டங்களாகவும் 2020ல் மூன்று கட்டங்களாகவும் பீகாரில் தேர்தல் நடந்த நிலையில், இப்போது அங்கு இரண்டே கட்டங்களாகத் தேர்தல் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இரு கட்டங்கள்

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே அங்கு பாஜக, ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுமே இரு கட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றே வலியுறுத்தினர். நிதிஷ் குமாரின் ஜேடியு தரப்பு மட்டுமே ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தி முடிக்க வலியுறுத்தியது. இந்தச் சூழலில் தான் இரு கட்ட தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாருக்கு லாபம்?

இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவது ஆளும் பாஜக கூட்டணிக்குப் பல வகைகளில் லாபமாக இருக்கும். முதலில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும்போது கூடுதல் இடங்களில் பிரச்சாரம் செய்யலாம். 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இருக்கும் நேரத்தில் கூடுதலாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். மேலும், ஆளும் தரப்பாக இருப்பதால் இரு கட்ட தேர்தல் கூடுதல் பிளஸ் பாயிண்டுகளை தரும்.

மறுபுறம் அங்குள்ள எதிர்க்கட்சிகளுமே கூட இரு கட்ட தேர்தலையே விரும்பியுள்ளன. அங்கு இப்போது எதிர்க்கட்சிக்கு ஆதரவான ஒரு மனநிலை இருப்பதாகச் சில சர்வேக்களில் கூறப்படும் நிலையில், அதை அப்படியே தக்கவைக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே முந்தைய தேர்தலைப் போல 3 அல்லது அதற்கு மேலான கட்டங்கள் இருக்கக்கூடாது.. விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் விரும்பியுள்ளனர்.

யாருக்கு லாபம்

பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் இப்போது பிரச்சாரத்திற்குச் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பல்வேறு கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தாண்டு அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் கடைசிக் கட்ட பிரச்சாரத்தை எந்தக் கூட்டணி தீவிரம் காட்டுகிறது அந்தக் கூட்டணியே வெல்லும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+