முதல்வர் பதவிக்காக.. அசாம் பாஜகவில் உருவான 2 கோஷ்டிகள்! வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் திணறல்
குவஹாத்தி: அசாமில் யாரை முதல்வராக்குவது என்பதில் பாஜக தலைமை தீவிர யோசனையில் இருக்கிறது. இதன் காரணமாக இன்னமும் அங்கு புதிய அரசு பதவிக்கு வரவில்லை.
அசாம் சட்டசபை பலம் 126. ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்ச தேவை 64 இடங்கள். இந்த நிலையில்தான் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 50 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 86 தொகுதிகள் கிடைத்தன.

முதல்வர் பதவிக்கு போட்டி
பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று இருந்தாலும், அசாம் மாநிலத்தில் இதுவரை புதிய அரசு பதவியேற்கவில்லை. கொரோனா தொற்று பெருமளவுக்கு பரவி வரும் இந்த சூழ்நிலையில், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்பது பொதுமக்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னமும் புதிய அரசு பதவி ஏற்க மறுப்பதற்கு காரணம் இருக்கிறது. அங்கு முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தலைவர்கள்
அசாம் மாநிலத்தில் பாஜக சார்பில் கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்தவர் சர்பானந்த சோனாவால். ஆனால் இந்த முறை பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகளை எடுத்துக் கொடுத்தது ஹிமாந்த பி ஷர்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர். 2015ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இதையடுத்து நிதி, திட்டமிடல், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட துறைகளில் இவர் அமைச்சராக பதவி வகித்தார்.

ஹிமாந்த பி ஷர்மா திறமை
தேர்தல் வியூகம் வகுப்பதிலும், கூட்டணி அமைப்பதிலும் மிகப்பெரிய வல்லுநராக பார்க்கப்படுகிறார். அவர் கொரோனா பரவலை, எதிர்கொண்ட விதம் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது . பாஜகவுக்கு வாக்களித்த பெரும்பகுதியினர் இவருக்காக தான் ஓட்டு போட்டனர் என்கிறது கருத்துக் கணிப்புகள்.

மக்கள் ஆதரவு
பல்வேறு பாஜக வேட்பாளர்களும், ஹிமாந்த பி ஷர்மா தங்களது தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும், அப்படி செய்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பி அவரை விரும்பி வேண்டி அழைத்தனர். இது பாஜக மேலிடத்திற்கும் தெரியும். இதுதான் இப்போது பிரச்சினைக்கு காரணம். ஆரம்பத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று ஹிமாந்த பி ஷர்மா, கூறி வந்தாலும், இப்போது தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 சதவீத எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நம்பர் 2
காங்கிரஸ் அரசு காலத்திலும் நம்பர் 2 அந்தஸ்தில் இருந்தவர், ஹிமாந்த பி ஷர்மா. அதேபோல பாஜக ஆட்சியிலும் நம்பர் 2வாக இருப்பதற்கு விரும்பவில்லை. முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்று விரும்புகிறார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு கதவை திறந்து விட்டதில் முக்கிய பங்காற்றியவர் ஷர்மா. மணிப்பூர் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசை கலைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். சிறுசிறு கட்சிகளை பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வைப்பதில் திறமையான ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.

மேலிட அரசியல்
இந்த நிலையில்தான் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அசாம் விவகாரம் தொடர்பாக அரசியல் பார்வையாளராக, யாரை அனுப்பலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். காங்கிரஸ் மேலிடம் அனைத்தையும் முடிவு செய்யும் நிலைமையில் இருக்கிறது.. மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் ஷர்மா குற்றச்சாட்டாக இருந்தது. இப்படி சொல்லிதான் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்தார். இப்போது பாஜகவும் மேலிடத்தில் இருந்து தான் அசாம் மாநில அரசியலை ஆட்டிப் படைக்கிறது என்பதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோடி விருப்பம்
தற்போதைய முதல்வரான சர்பானந்த சோனோவால், பிரதமர் மோடியிடம் நல்ல பெயர் பெற்றவர் . மத்தியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது மோடிக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. எனவே அவரையே முதல்வராக தொடரச் செய்ய மோடி விரும்புகிறார்.

மத்திய அமைச்சரவை
ஹிமாந்த பி ஷர்மாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரலாமா என்று பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.ஆனால் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் சேர விரும்புவோர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த மத்திய பிரதேச முக்கிய பிரமுகர் ஜோதிராதித்யா சிந்தியா இன்னும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். எனவே தீவிர யோசனையில் இருக்கிறது பாஜக தலைமை.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications