For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் டீமிலும் உற்சாகமில்லை, நவநீதகிருஷ்ணனும் ஹேப்பியில்லை.. பாட்டு பாடி வாங்கி கட்டிகிட்டாரோ?

இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் உற்சாகமில்லாமல் இருந்தததை போல அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் முகத்திலும் ஈயாடலையே. அப்படி என்னதான் நடந்திருக்கும

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யார் முகத்திலும் உற்சாகமில்லை. உதட்டளவில் இருக்கும் நம்பிக்கை உள்ளத்தளவில் காணாமல் போனது ஏனோ?

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பாக இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சசிகலா அணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் வாதிட்டனர். ஓபிஎஸ் அணியின் சார்பில் சி.எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாதிட்டனர்.

காலையில் ஓபிஎஸ் அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவியது. ஆனால் பிற்பகலில் சசிகலா தரப்பு வாதங்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இறுதி முடிவு

இறுதி முடிவு

அனைத்து தரப்பு வாதங்களும் முடித்துவிட்ட நிலையில் தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்களுடனும், மூத்த அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்து விட்டு இன்று இரவோ அல்லது நாளைக்கோ முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மனோஜ் பாண்டியன் நம்பிக்கை

மனோஜ் பாண்டியன் நம்பிக்கை

உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பதால், இரட்டை சிலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். குற்றவாளியான சசிகலாவால் வேட்பாளரை அங்கீகரித்து கையெழுத்திடுவது செல்லாது. நல்ல முடிவை தேர்தல் ஆணையம் அளிக்கும் என்று காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

 களையிழந்த ஒபிஎஸ் தரப்பினர்

களையிழந்த ஒபிஎஸ் தரப்பினர்

வாதங்கள் முடிவடைந்தவுடன் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமின்றி காணப்பட்டனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை அலுவலகம் நியமனம் செய்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணியினர் உற்சாகமில்லாமல் உள்ளனர் என்று கருதப்படுகிறது.

 நவநீத கிருஷ்ணன் முகம் வாட்டம்

நவநீத கிருஷ்ணன் முகம் வாட்டம்

வாதங்களை முடித்துக் கொண்டு வெளியே வந்த அதிமுக சசிகலா தரப்பு எம்பி நவநீதி கிருஷ்ணன் மிகவும் சோர்வாக காணப்பட்டார். நிருபர்களின் எந்த கேள்விக்கும் அவரால் நம்பிக்கையாக பதில் சொல்ல முடியவில்லை. இரு தரப்பினரின் முகமும் வாடியுள்ளதால் இரட்டை இலை சின்னமானது முடக்கப்படுமா என்று அரசியல் நோக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

English summary
Both OPS and Sasikala team were unhappy, double leaf symbol may be freeze?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X