கறுப்புப் பணம் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பறப்பது ஏன்? இதோ ஒரு அதிர்ச்சி உண்மை!
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பணம் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பறந்து கொண்டிருக்கிறது.
அதுவும் விமானங்களில் எடுத்துச் செல்லும் அளவுக்கு தீவிரமாகியுள்ளது. கார்கள், லாரிகள், கண்டெய்னர்களிலும் கூட கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

காரணம், இந்தியாவின் வருமான வரித் துறையின் சட்டம், பல்வேறு பிரிவு மக்களுக்கும், தனி நபர்களுக்கும் தனித்தனி வரிச் சலுகைகளை வைத்துள்ளது.
வருமான வரித்துறையின் இதுபோன்ற வரிச் சலுகைகளை, கருப்புப் பணம் வைத்திருக்கும் நபர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அசாமின் வடக்கு கச்சார் மலை, மிகிர் மலைப் பகுதி, மேகாலயாவின் காஸி மலை, காரோ, ஜெயின்டியா மலைப் பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி மக்களும் வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களின் வருமானத்துக்கு வரிகளே கிடையாது.
ஆனால், இந்த வரிச் சலுகையைப் பயன்படுத்தி கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதுபோன்ற பகுதிகளில் உள்ளவர்கள் மூலமாக குறிப்பிட்ட அளவு கமிஷன் கொடுத்து வெள்ளையாக மாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு தொழிலதிபரிடமிருந்து ரூ 5 கோடி பறி முதல் செய்யப்பட்டது, வட கிழக்கு மாநிலம் ஒன்றிற்கு எடுத்துச் சென்ற போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications