ஒடிசா ரயில் விபத்திற்கும் அரியலூருக்கும் என்னங்க சம்பந்தம்? திடீரென அந்த ஊர் டிரெண்டாவது ஏன்? காரணம்
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு இடையில் தற்போது திடீரென அரியலூர் பெயர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் இந்த வார்த்தை டிரெண்ட் ஆவதற்கு பின் முக்கிய காரணங்கள் உள்ளன.
இந்திய வரலாற்றில் நடந்த பெரிய ரயில் விபத்துக்களையும் அரியலூர் இரயில் விபத்து முக்கியமானது ஆகும். மொத்த இந்திய நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விபத்தாகும் இது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இந்த கொடிய விபத்து ஏற்பட்டது.

சென்னையிலிருந்து 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி சென்ற ரயில் விபத்தில் சிக்கியது. விருத்தாச்சலம் சந்திப்பில், சேலம் செல்லும் பெட்டி ஒன்றைத் தவிர்த்து 12 பெட்டிகள் தூத்துக்குடி நோக்கி செல்ல, அரியலூர் அருகே விபத்து ஏற்பட்டது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அரியலூர் - கல்லகம் இரயில் நிலையங்களுக்கிடையே விபத்து நிகழ்ந்தது. மழை காரணமாக அங்கே வெள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் தண்டவாளம் தெரியவில்லை. அதுவும் நீராவி எஞ்சின் ரயில். அதிகாலை 5.30 மணி என்பதால் ஓட்டுனருக்கு எதுவும் தெரியவில்லை.
முக்கியமாக தண்ணீரின் அளவுபற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு எதுவும் தெரியாத நிலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 250 பேர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தின் காரணமாக இந்தியாவே குலுங்கியது. அதன்பின் ரயில் பயண பாதுகாப்பு விதிகள் மாற்றப்பட்டது.
முக்கியமாக அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில்தான் அந்த அரியலூர் விபத்தை விட இந்த ஒடிசா விபத்து மோசமாக இருக்கலாம், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அதை தாண்டும் ஆபத்து உள்ளது.
இதனால் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர் விபத்தை எடுத்துக்காட்டி பேசி வருகின்றனர். இதனால் அந்த வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விபத்து: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
1956 :: Resignation Letter of Railway Minister Shri Lal Bahadur Shastri After Ariyalur Train Accident
— indianhistorypics (@IndiaHistorypic) June 2, 2023
( Photo - PM Museum ) pic.twitter.com/LuNGxDa88G
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications