இதற்கும் வாய்ப்புண்டு.. பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்தாமல் போகலாம்... ஏன் தெரியுமா?
பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்தாமலும் போகலாம் என்பதற்கும் காரணங்கள் உண்டு.
டெல்லி: லோக்சபா தேர்தலை பாஜக முன்கூட்டியே நடத்துமா? நடத்தாதா? என்கிற பட்டிமன்றம் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்களது செல்வாக்கு சரிந்து கொண்டே போவதால் திடீர் தேர்தலை நடத்தி மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைப்பது என்பதுதான் பாஜகவின் வியூகம். இதற்கேற்ப அரசியல் நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.
ஆனால் தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தலை பாஜக திடீரென நடத்த வாய்ப்பே இல்லை.. இன்னும் அரசியல் களமும் சரி... சூழ்நிலைகளும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

வறுமையே வெளியேறு
1967-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்று இந்திரா காந்தி பிரதமரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இந்திராவுக்கு எதிராக காமராஜர், மொரார்ஜிதேசாய் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரஸை உருவாக்கினர். இதனால் 1971-ம் ஆண்டு அதாவது ஓராண்டுக்கு முன்னரே 'வறுமையே வெளியேறு- ஹரீபி கட்டாவ்' என்ற முழக்கத்துடன் இந்திரா தேர்தலை சந்தித்து வென்றார். இத்தேர்தலில் இந்திரா வெற்றி செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்க நாடு எமர்ஜென்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்தியா ஒளிர்கிறது
2004-ம் ஆண்டு வாஜ்பாய் அரசும் முன்கூட்டியே லோக்சபா தேர்தலை சந்தித்தது. அப்போது இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. இப்போது அதேபோல 2022-ல் புதிய இந்தியா என்ற முழக்கத்தை பாஜக முன்வைக்கிறது. ஆனால் 2004- தேர்தல் முடிவுகளைப் போல அமைந்துவிடுமோ என்கிற அச்சம் பாஜகவுக்கு இருக்கிறதாம்.

விவசாயிகள் கொந்தளிப்பு
நாட்டின் 340 லோக்சபா தொகுதிகள் கிராமப்புறங்களில்தான் உள்ளன. இதுவரை மத்திய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் சார்ந்தவை. அதேநேரத்தில் விவசாயிகள் வாழ்வை தொலைத்துவிட்டனர். விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என்பது போன்ற எண்ணற்ற போராட்டங்களால் கிராமப்புறங்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனை சமாளிக்க புதிய திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக.

வியூகம் உடனடி தேவை
அண்மையில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் சரி குஜராத் தேர்தல் முடிவுகளும் பாஜகவை பெரும் பீதி அடைய வைத்துள்ளன. இதனால் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் வியூகங்களை வகுக்க வேண்டிய சிக்கலில் இருக்கிறது பாஜக. இதனால் உடனடியாக தேர்தலை சந்திக்காது பாஜக எனவும் கூறப்படுகிறது.

அவகாசம் தேவை
இப்போதுதான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கிறார். அவர்களை களமிறக்கி ஆதாயம் தேடுவதற்கு பாஜகவுக்கு அவகாசம் தேவை என்பதாலும் உடனடி தேர்தலுக்கு சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications