ஜெயின்கள் VS பட்டேல்கள்...ஜாதி பஞ்சாயத்தில் பா.ஜ.க... குஜராத் முதல்வர் மாற்றத்தின் பரபர பின்னனி!
காந்திநகர்: குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் ரூபானி திடீரென மாற்றப்பட்டதன் பின்னணியே ஜாதிய விவகாரம் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 4 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் ரேஸில் போட்டி ஏற்பட்டது. இந்த ரேஸில் வென்ற ஹிமந்த பிஸ்வா ஷர்மா முதல்வராக்கப்பட்டார். கர்நாடகாவில் எடியூரப்பா மாற்றப்பட்டு பசவராஜ் பொம்மை கொண்டுவரப்பட்டார். உத்தரகாண்ட்டில் 2 பேர் முதல்வர் நாற்காலியில் இருந்து மாற்றப்பட்டனர்.
இந்த பட்டியலில் இப்போது குஜராத்தும் இணைந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மீது அண்மைக்காலமாக அதிருப்தி குரல்கள் ஓங்கி கிளம்பத் தொடங்கின. குறிப்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் விஜய் ரூபானி மீது கடும் அதிருப்தி எழுந்தது.

கொரோனா பேரவலம்
கொரோனா 2-வது அலையின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்டது குஜராத் மாநிலம். குஜராத்தில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்தன. மருந்துகள் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என குஜராத் மாநிலமே பேரவலத்துக்குள்ளாகியது.

நீதிமன்றத்தில் குட்டு
இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில், விஜய் ரூபானி அரசை மிக கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம், விஜய் ரூபானியின் அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக நடக்கவில்லை என குற்றம்சாட்டியது. கொரோனா மரணங்களை குஜராத் மாநில அரசு மறைக்கிறது என்கிற குற்றச்சாட்டையும் அம்மாநில உயர்நீதிமன்றம் முன்வைத்தது.

முதல்வராக விஜய் ரூபானி
இத்தகைய அதிருப்திகள்தான் விஜய் ரூபானி தூக்கி அடிக்கப்பட்டதன் பின்னணியாக பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் குஜராத்தில் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய பட்டேல் ஜாதியினரை திருப்திப்படுத்தவே விஜய் ரூபானியிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது என்கின்றன அம்மாநில பாஜக வட்டாரங்கள். விஜய் ரூபானிக்கு முன்னதாக ஆனந்திபென் பட்டேல், முதல்வராக இருந்தார். துணை முதல்வரான நிதின் பட்டேல்தான் முதல்வராக்கப்படுவார் என்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் ரூபானி முதல்வரானார்.

பட்டேல் வாக்கு வங்கி
குஜராத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர் விஜய் ரூபானி. ஜெயின்கள் சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் பாஜகவின் வலிமையான வாக்குவங்கியாக இருப்பவர்கள். மேலும் மாநில பாஜக தலைவராக சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டார். அந்த பதவியும் பட்டேல் சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை. மாநில முதல்வர் பதவி, மாநில கட்சித் தலைவர் பதவி என எதுவுமே கிடைக்காமல் போனதால் பா.ஜ.க.வில் உள்ள பட்டேல் ஜாதி தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே குஜராத் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே உ.பி, பஞ்சாப் தேர்தல்களுடன் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் பட்டேல் ஜாதியினர் வாக்குகளைத் தக்க வைக்க் வேறுவழியே இல்லாமல் விஜய் ரூபானியை கழற்றிவிட்டு பூபேந்திர பட்டேலை முதல்வராக்கி இருக்கிறது பா.ஜ.க.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications