மோடியை அத்தனை பேச்சு பேசிய சந்திரபாபு நாயுடு.. நண்பேன்டாவாக மாற்ற முயற்சிக்கும் பாஜக-அதே கணக்குதான்!
விசாகப்பட்டினம்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். அதேநேரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த சந்திரபாபு நாயுடுவை அமித்ஷா ஏற்றுக் கொண்டது எதற்காக என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நிகழ்கின்றன.
"மனைவியை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்பவர் மோடி; குருநாதர் அத்வானியையே ஓரம்கட்டியவர்; மோடிக்கு குடும்ப உறவுகள் பற்றி எதுவும் தெரியாது"
"மோடியைவிட அரசியலில் நாங்கள் எல்லாம் சீனியர்கள்"
"ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு எதிராக போராட்டம்"

-இப்படி எல்லாம் பல உக்கிர முகங்களைக் காட்டியவர்தான் ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. இத்தனைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தென்னிந்தியாவின் முக்கிய கூட்டணி கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி இருந்து வந்தது. தெலுங்கானா மாநில பிரிவினைக்குப் பின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய பாஜக அரசிடம் போராடிப் பார்த்தார் நாயுடு. ஆனால் பாஜகவோ நாயுடுவை கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன நாயுடு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
வெளியேறிய நாயுடு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பாஜகவை மிகக் கடுமையாகவே சாடினார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தார். பிரதமர் மோடியும் சந்திரபாபு நாயுடுவின் வாரிசு அரசியல் விவகாரத்தை கையில் எடுத்து விளாசினார். ஒரு கட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையக் கூடிய சாத்தியத்தையும் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வைத்திருந்தார்.
தேர்தல் களம்: தெலுங்கானா சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது; ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படியான பின்னணியில்தான் டெல்லியில் திடீரென அமித்ஷா- சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புகளை முன்வைத்து பல்வேறு யூகங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சியுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பாஜக தலைவர்களோ அவசரப்பட வேண்டாம்; எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தொண்டர்களிடம் கூறி வருகின்றனர்.
பாஜக கணக்கு இதுதான்: பாஜகவைப் பொறுத்தவரையில் தெலுங்கானாவில் அதிகபட்சம் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் பெற முடியும்; ஆந்திராவில் பூஜ்ஜியத்தில் இருந்து ஏதேனும் ஒன்றிரண்டு முன்னேற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா? என போராடிப் பார்க்க வேண்டும். இதுதான் 2 மாநிலங்களின் பாஜகவுக்கான களநிலவரம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்தால் நிச்சயம் சிங்கிள் டிஜிட் சீட்டுகளை பாஜக வெல்ல முடியும். அதேபோல தெலுங்கானாவில் முதல்வர் கேசிஆருக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை சந்திரபாபு நாயுடு துணையுடன் அறுவடை செய்து 5 சீட்டுகளையாவது பெறலாம் என்பதுதான் பாஜகவின் கணக்கு. எதுவுமே கிடைக்காமல் இருக்கும் நிலையில் ஏதோ கிடைத்தாலே போதும் என்கிற மனநிலையில் இருக்கும் பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடுவை விட்டால் வேறு கதியும் இல்லை; அதனால் அவரை கெட்டியாகவே பிடித்து தக்க வைத்து கொள்ளும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications