தங்கத்தை விட்டு விட்டு வைரம், பிளாட்டினத்துக்குத் தாவும் மக்கள்...!
டெல்லி: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருப்பதால் மக்கள் தங்கத்துக்குப் பதில் வைரம், பிளாட்டினத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பி வருவதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. குறிப்பாக திருவிழாக் காலங்களில் விலை வேகமாகவே ஏறுகிறது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூட தங்கத்தை வாங்கும் மோகத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று கோரிக்கை கூட வைத்திருந்தார்.
இந்த நிலையி்ல் மக்களிடையே தங்க மோகம் சற்றே குறைந்து வருவதாக வர்த்தக அமைப்பான அசோசம் எடுத்துள்ள ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்குவதில் நாம்தான் முதலிடம்
உலகிலேயே தங்கத்தை வாங்கிக் குவிப்பதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

விலை கூடினாலும் கூட்டத்திற்குக் குறைவில்லை
தங்கத்தின் விலை கூடியபடியே இருந்தாலும் கூட நகைக் கடைகளில் கூட்டம் குறைந்ததாக சரித்திரமே இல்லை. அப்படி ஒரு தங்க மோகத்தில் மக்கள் உள்ளனர். காரணம், அதை ஒரு முதலீடாக அவர்கள் கருதுவதால்.

இறக்குமதி செய்து ஓய்ந்து போன மத்திய அரசு
மக்களின் தங்கத் தேவை அதிகரித்தபடியே இருப்பதால் மத்திய அரசும் தங்கத்தை பெருமளவில் இறக்குமதி செய்து கொண்டுதான் உள்ளது.

டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ. 34,500
டெல்லியில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி 10 கிராம் தங்கம் ரூ. 34,500 ஆக இருந்தது.

வைரம், பிளாட்டினம்
இப்படி தொடர்ந்து விலை ஏறிய வண்ணம் இருப்பதால் தங்கத்தை விட்டு விட்டு வைரம், பிளாட்டினம் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பி வருகின்றனராம்.

அசோசம் ஆய்வு
இதுகுறித்து அசோசம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் விற்பனையாளர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி தங்கத்தை விட்டு விட்டு வைரம், பிளாட்டினம் குறித்து ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளது.

வைரம்- பிளாட்டினம் மீது மக்கள் ஆர்வம்
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி கூறுகையில், வைரத்தின் மீதும், பிளாட்டினம் மீதும் மக்களின் ஆர்வம் திரும்பியுள்ளது. நாங்களும் அதே போக்கில் செயல்படத் தொடங்கியுள்ளோம் என்றார்.

விற்பனை அதிகரிப்பு
தற்போது பிளாட்டினம், வைர நகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம். கடந்த ஒரு ஆண்டில் இந்த விற்பனை விகிதம் அதிகரித்தபடி உள்ளதாம்.

பிளாட்டினம் சேர்த்த வைர நகைகளுக்கு ஆர்வம்
பிளாட்டினம் சேர்க்கப்பட்ட வைர நகைகளுக்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாம். சாதாரண தங்க நகைகளை விட இந்த நகைகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளதாம். மேலும் வெள்ளி, தங்கம் என்று அரைத்த மாவையே அரைக்காகமல், வைரம், பிளாட்டினமும் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

தங்க இறக்குமதி குறைகிறது
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதியானது 3.38 டன்களாக இருந்தது. இது செப்டம்பர் மாதம் 7.24 டன்களாக இருந்தது. இது வழக்கமாக செய்யப்படும் இறக்குமதி அளவை விட பல மடங்கு குறைவாகும். வழக்கமாக மாதந்தோறும் சராசரியாக 60 டன் தங்கம் வரை இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரத்துக்கான கிராக்கி கிடுகிடு உயர்வு
அதேசமயம், வைர நகைகளுக்கான கிராக்கி கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
நிச்சயம் ப.சிதம்பரத்துக்கு இது சந்தோஷச் செய்திதான்...
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications