25 சர்ச்சுகளில் தாக்குதல்.. 3க்கு தீ வைப்பு! மணிப்பூர் கலவரத்தில் தேவாலயங்கள் குறி வைக்கப்படுவது ஏன்
இம்பால்: மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரத்தில் அங்கே இருக்கும் கிறிஸ்துவ சர்ச்சுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. வரிசையாக சர்ச்சுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினருக்கும் குகி மலைவாழ் மக்களுக்கும் இடையில் நடந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக குகி பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக குகி பிரிவினர் செய்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினர் பெரும்பாலும் ஓபிசி பிரிவில் உள்ளனர். இன்னும் சிலர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து, இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்து எஸ்டி பிரிவை சேர்ந்த பழங்குடி இன மக்களான குகி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதான் அங்கு கலவரத்திற்கு காரணமாக மாறி உள்ளது.
மெய்ட்டிக்கு உள்ள பிரச்சனைகள்
அங்கே 53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அதே சமயம் குகி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் 40% மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். அவை பரவலாக நாகா பழங்குடியினர் (24%) மற்றும் குகி/ஜோமி பழங்குடியினர் (16%) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ள போதிலும் அவர்கள் நிலப்பரப்பில் வசித்து வருகிறார்கள். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித இடங்களில் மட்டுமே அவர்கள் வசித்து வருகிறார்கள்.
மீதம் உள்ள பழங்குடியினர் 90 சதவிகித இடங்களில்.. பெரும்பாலும் மலைகளில் வசித்து வருகிறார்கள்.
இதில் மெய்ட்டிக்கு நில சீர்திருத்த சட்டத்தில் உரிமை இல்லை. இதனால் அவர்கள் காட்டு பகுதியில் நிலம் வாங்க முடியாது. இவர்கள் பெரும்பாலும் வைஷ்னவ இந்துக்கள்.
ஆனால் குகி மக்கள் சாதாரண நிலப்பரப்பில், காட்டில் என்று எங்கும் நிலம் வாங்க முடியும். குகி மக்கள் கிறிஸ்துவர்கள்.
கிறிஸ்துவம்
பழங்குடிகளான இவர்கள் முன்பு இந்துக்களாக இருந்தனர். அங்கே 1894ல்தான் கிறிஸ்துவம் பரவதொடங்கியது . 1901ல் அங்கே 8 சதவிகிதம் இருந்த கிறிஸ்துவம் இப்போது 35 சதவிகிதம் ஆகி உள்ளது. 66 சதவிகிதம் இருந்த இந்து சதவிகிதம் 41 சதவிகிதம் ஆகி உள்ளது.
அங்கே கிறிஸ்துவ மத மாற்றமும் குகி - மெய்ட்டி பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட காரணம் ஆகும். மெய்ட்டி பிரிவினர்தான் அங்கே சட்டசபையில் 90 சதவிகிதம் உள்ளன. அங்கே அரசின் உயர் பதவிகள் தொடங்கி ஆட்சி அதிகார மையங்களில் மெய்ட்டி மக்கள்தான் இருக்கிறார்கள்.
இதனால் மெய்ட்டி பிரிவினர் எஸ்டி ஆகும் பட்சத்தில் பழங்குடிகளான எங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று குகி என்று பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நிலப்பகுதியில் உள்ளனர். நாங்கள் காட்டில் உள்ளோம். எங்களுக்கே இந்த மண் சொந்தம். நாங்கள் மைனாரிட்டி. அதனால் எங்களுக்குத்தான் இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று குகி பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே பாஜக அரசு மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க மும்முரமாக இருக்கிறது. மெஜாரிட்டி இவர்கள்தான், இவர்களின் ஆதரவில் எளிதாக தேர்தல்களை வெல்ல முடியும் என்பதால் பாஜக இவர்களுக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது.
புகார் என்ன - சர்ச் தாக்குதல் ஏன்?
மெய்ட்டி பிரிவினர் பலர் அங்கே குடியேறி இருக்கும் குகி பழங்குடியினர் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள். சிலர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று புகார் வைக்கின்றனர்.இதனால் என்ஆர்சி கொண்டு வர வேண்டும் என்றும் மெய்ட்டி பிரிவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது போக அங்கே பாஜக அரசு காட்டு பகுதியில் கட்டியதாக கூறி 3 தேவாலயங்களை இடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான கிறிஸ்துவர்களான குகி மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இதை எதிர்த்தே அங்கே குகி பிரிவினர் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் மெய்ட்டி பிரிவினர் தாக்குதல் நடத்த.. இந்த மோதல் தற்போது கலவரமாக உருவெடுத்து உள்ளது. இதில்தான் அங்கே இருக்கும் குகி பிரிவினரின் சர்ச்சுகளை மெய்ட்டி மக்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 27 சர்ச்சுகள் தாக்கப்பட்டு உள்ளன. 3 சர்ச்சுகள் வரை தீ வைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்துவ மதம் வளர்ந்தது மற்றும் குகி மக்கள் கிறிஸ்துவர்கள் என்ற காரணங்களால் அங்கே சர்ச்சுகள் மெய்டி மக்களால் காக்கப்படுகிறது. இந்த கலவரத்தை தடுக்க அங்கே தற்போது ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications