"பசு அரசியல்.." ராஜஸ்தானை அலறவிடும் பிரச்சினை இதுதான்! காங்கிரஸ் vs பாஜக வைத்திருக்கும் திட்டம் என்ன
ஜெய்ப்பூர்: நமது நாட்டில் மற்ற எந்தவொரு மாநிலத்தைக் காட்டிலும் ராஜஸ்தானில் தான் பசு அரசியல் முக்கியமானதாக மாறியுள்ளது. இது அங்கே களத்தில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலமே தேர்தலுக்கு ரெடியாகி வரும் நிலையில், அங்கே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், அங்குள்ள மேவாட் என்ற பகுதியில் பசுவைச் சுற்றியே அரசியல் இருக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டம் பசு கடத்தல் அதிகம் நடக்கும் பகுதிகளும் ஒன்றாகும். அதேநேரம் இங்குதான் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இயங்கும் கும்பல் திடீரென உள்ளே புகுந்து அடித்துக் கொல்லும் சம்பவங்களும் கூட நடக்கும்.
ராஜஸ்தான்: இந்தப் பகுதியில் பாஜகவின் வியூகமே பசுவைச் சுற்றித் தான் இருக்கிறது. பசு மற்றும் இந்துத்துவாவை வைத்து ராஜஸ்தானைக் கைப்பற்ற முடியும் என்று பாஜக நம்புகிறது. அதேநேரம் காங்கிரஸ் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் ஆதரவுடன் வெல்ல முடியும் என நம்புகிறது. ஒட்டுமொத்தமாக ராஜஸ்தான் அரசியலில் இந்த பசு அரசியல் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
அங்குள்ள திஜாரா சட்டமன்றத் தொகுதியில் ஆல்வார் எம்பியாக உள்ள பாபா பாலக் நாத் என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. மிகத் தீவிரமான இந்துத்துவ தலைவராக அறியப்படும் பாபா பாலக் நாத்தை வேட்பாளராக அறிவித்தன மூலம் அங்கே மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயல்வதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேபோல இந்துத்துவா மற்றும் பசு பாதுகாப்பு குறித்துப் பேசும் மற்ற பாஜக தலைவர்களையும் தேர்தல் களத்தில் பாஜக இறக்கியுள்ளது.
மற்றொரு வலதுசாரியான கியான்தேவ் அஹுஜாவுக்கு ராம்கரில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதிகளில் இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
பசு கடத்தல்: இந்த ஆல்வார் மாவட்டத்தில் பசு கடத்தல் சம்பவங்கள் மிக அதிகமாக நடந்து வருகிறது. அங்கே வீடுகள் அல்லது வயல்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகளைக் கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்தி செல்கிறார்கள். இது குறித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் போதிலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அவர்களைப் பிடிக்க வரும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு கூட நடந்துள்ளது.அப்பகுதியில் ஒரே மாதத்தில் சுமார் 20 பசு கடத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
பசு படுகொலை: அதேநேரம் மறுபுறம் இதே ஆல்வார் மாவட்டத்தில் பசுக் கடத்தல் என்று கூறி மக்களை அடித்துக் கொல்லும் சம்பவங்களும் அதிகமாக நடந்துள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் ஆறு சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளது. கடந்த காலங்களில் இங்குப் பசு கடத்தலைத் தடுக்கிறோம் என்ற பெயரில் நடந்த படுகொலையில் தேசியளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
பசுக்கள் என்பது ராஜஸ்தானில் இந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் அங்குச் சாலையில் சுற்றித் திரியும் பல நூறு பசுக்கள் அங்குள்ள இந்து மற்றும் முஸ்லீம் என இரு தரப்பு விவசாயிகளும் தலைவலியாக மாறியிருக்கிறது.
விவசாயிகள் பிரச்சினை: யாரும் உரிமை கோரத இந்த ஆயிரக்கணக்கான பசுக்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழித்துவிடுகிறதாம். இதனால் இந்த பசுக்களிடம் இருந்து தங்கள் பயிர்களைக் காப்பாற்றுவதே விவசாயிகளுக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்த கால்நடைகளிடமிருந்து தங்கள் வயல்களைக் காப்பாற்ற கடும் குளிர், நள்ளிரவு என நேரம் காலம் பார்க்காமல் காவல் காக்க வேண்டி இருக்கிறது.
இதைச் சமாளிக்க விவசாயிகளே இது போலச் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களைப் பிடித்து ரகசியமாக வேறு கிராமத்திற்கோ அல்லது காட்டுப் பகுதிக்கோ இரவில் கொண்டு சென்று விட்டு விடுவார்களாம். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "எனது ஒரு கிராமத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் இப்படிச் சுற்றித் திரிகிறது. எனது கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு 30 முதல் 40 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது" என்றார்.
அதேபோல இங்குள்ள இஸ்லாமிய விவசாயிகள் கூறுகையில், "எங்களுக்கும் இதே பிரச்சினைதான். எனது நிலத்தைக் காப்பதே எனக்குப் பெரும்பாடாக இருக்கிறது.. கால்நடைகள் எனது நிலத்தில் நுழைந்தால் அதை விரட்ட வேண்டும். அப்போது எனது நிலத்தைத் தாண்டி சென்று விரட்டினால் பசுவைக் கடத்துகிறேன் என்று சொல்லி அடித்துக் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது" என்றார்.
தயங்கும் அரசியல் கட்சிகள்: இப்படி பசுக்கள் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தாலும் அங்கே அரசியல் அதைச் சுற்றியே இருப்பதால் இந்த பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க இரு கட்சிகளும் தாயாராக இல்லை என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications