நீங்கள் போயிட்டு வாங்க.. சென்னை மழைக்கு இடையே.. கனிமொழிக்கு ஸ்டாலின் தந்த அசைன்மென்ட்..என்ன காரணம்?
ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் உமர் அப்துல்லா. இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் கனிமொழி எம்.பி.
ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் (NC) தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார். அக்டோபர் 16 ஆம் தேதி பதவியேற்குமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அனுப்பிய கடிதத்தை அப்துல்லா நேற்று முதல்நாள் வெளியிட்டார்.

அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், சின்ஹா, "ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவிடம் இருந்து 2024 அக்டோபர் 11ஆம் தேதி கடிதம் வந்துள்ளது, அதில் நீங்கள் ஒருமனதாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் நீங்கள் முதல்வராக பதவி ஏற்கலாம். அக்டோபர் 16 ஆம் தேதி பதவியேற்கலாம், என்று அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், சின்ஹா குறிப்பிட்டு உள்ளார்.
கனிமொழி: இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார் கனிமொழி எம்.பி. இதற்காக நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றவர், அங்கிருந்து இன்று காஷ்மீர் செல்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்திருந்தார் உமர் அப்துல்லா.
ஆனால், மழை வெள்ளம் பிரச்சனை இருந்ததால், அதைத் தவிர்த்துவிட்டு செல்வது, தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும் என நினைத்து, கனிமொழியை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். நேற்று முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். உதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன்.வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்தேன். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கான உணவு - தங்குமிட வசதிகள் போன்றவை குறித்துக் கேட்டறிந்தேன்.
கனமழை நிற்கும் வரையில், அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்றி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு உத்தரவிட்டுள்ளேன். கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்!
அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன், என்று மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் போகவில்லை: இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்திருந்தார் உமர் அப்துல்லா. மழை காரணமாக தான் செல்லாமல் தனக்கு பதிலாக டி.ஆர்.பாலுவை அனுப்பி வைக்கலாம் என ஸ்டாலின் யோசித்தாராம். ஆனால், என்ன நினைத்தாரோ திடீரென கனிமொழியிடம், "நீ, போய்ட்டு வாம்மா" என்று கேட்டுக்கொன்டார் என்கிறார்கள் திமுக தரப்பு உடன்பிறப்புகள் !!












Click it and Unblock the Notifications