மோடி பெரிதாக பிரச்சாரத்திற்கு போகாத நிலையிலும்.. ஹரியானாவை அசால்ட்டாக தூக்கிய பாஜக.. எப்படி நடந்தது?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில் கூட தற்போது ஹரியானவை பாஜக கைப்பற்றி உள்ளது. ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.
லோக்சபா தேர்தல் சரிவு: கடந்த ஜூன் மாதம் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உதவியுடன் பாஜக ஆட்சியே நடக்கிறது.
மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் தோல்வி: 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மொத்த இடங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் பாஜக அல்லது என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்து உள்ளனர்.
164 தொகுதிகளில் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தி உள்ளார். அதில் பாஜக/என்டிஏ வேட்பாளர் 77 இடங்களில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்துள்ளனர். மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் 87ல் வெற்றி பெற்று உள்ளனர்.
ராஜஸ்தான் தோல்வி: முக்கியமாக ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில், பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக பேசினார். இங்கே பாஜக கிட்டத்தட்ட 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. காங்கிரஸ் ஆதரவு பாரதிய ஆதிவாசி கட்சி வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். பஞ்சாபின் பல்வேறு தொகுதிகளான ஹோஷியார்பூர், ஜலந்தர், குர்தாஸ்பூர், பாட்டியாலா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பல பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார்.
உத்தரப்பிரதேசத்திலும் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கடுமையாகச் சுருங்கியது . மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் வெறும் 33 இடங்களுக்குக் பாஜக குறைக்கப்பட்டது, சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. உ.பி. முழுவதும் பிரதமர் மோடி பல பேரணிகளை நடத்தினார். காஜிபூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்தார். அங்கே சமாஜ் வாதி கட்சியின் முக்தார் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரியிடம் காஜிபூர் தொகுதியை பாஜக இழந்தது.
இப்படி மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் சில முக்கிய இடங்களை பாஜக இழந்தது. இது போக தமிழ்நாட்டில் மோடி பிரச்சாரம் செய்த அண்ணாமலையின் கோவை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.
உ.பி தவிர, பாஜக மற்றும் என்.டி.ஏவின் மிகப்பெரிய இழப்புகள் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்துள்ளன. அங்கு பிரதமர் மோடி 18 பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களை நடத்தினார். மகாராஷ்டிராவில், சோலாப்பூர், மாதா, லத்தூர், தாராஷிவ் போன்ற இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வியடைந்தது.
மோடி பிரச்சாரம் இல்லை: இதனால் இந்த முறை ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு மோடி பெரிதாக பிரச்சாரமே செய்யவில்லை. 2019ல் 10 முறை தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தியவர் இந்த முறை ஹரியானாவில் 4 கூட்டங்கள் என்று குறைத்துக்கொண்டார். ஆனால் அதற்கும் பெரிதாக கூட்டம் இல்லை. ஈர்ப்பும் இல்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், ஹரியானாவில் மோடி பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் மோடி ஹரியானாவில் பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் கூட ஹரியானவை பாஜக தட்டி தூக்கி உள்ளது. காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. இந்த நிலையில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட அங்கே ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அங்கே பாஜகவின் தோல்வி மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக சர்ப்ரைஸ் கொடுத்த ஹரியானவை கைப்பற்றி உள்ளது.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications