மிசோரம்: இன்று வாக்கு எண்ணிக்கை ஏன் ஒத்திவைப்பு? அப்படி என்னதான் 'ஞாயிற்றுக்கிழமை' நடக்கும்?
ஐஸ்வால்: தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஆனால் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ந் தேதி நாளை திங்கள்கிழமை நடைபெறும்.

மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் ஏற்கனவே டிசம்பர் 3-ந் தேதிதான் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மிசோரம் மாநில அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒருமித்த குரலில் டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டாம்; டிசம்பர் 4-ந் தேதி நடத்துங்க என்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த மிசோரம் மாநில அரசியல் கட்சிகள், மிசோரமில் பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்களில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நாங்கள் இணைந்திருப்போம். அன்றைய தினம் வேறு பணிகளில் ஈடுபடுவதும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை ஆண்டவரை வழிபடுவதற்கான புனித நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால்தான் வேறு ஒரு நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றன.
ஆனால் தேர்தல் ஆணையமோ, இதனை கருத்தில் கொள்ளாமல் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டது. அதேநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றும் கோரிக்கையும் வலுத்தது. மிசோரம் மாநில என்.ஜி.ஓக்கள் கூட்டமைப்பு டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை முகாமிட்டு சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். மிசோரமில் ஆளுநர் மாளிகை முன்பாகவும் போராட்டம் நடத்தினர்.
இந்த சூழ்நிலையில்தான் மிசோரம் மக்களின் கோரிக்கையை ஏற்று வாக்கு எண்ணிக்கை தேதியை டிசம்பர் 4-க்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் Lalnghinglova Hmar கூறுகையில், மிசோரம் மாநிலம் என்பது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ள மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்பது எங்களுக்கு பெரிய பிரச்சனை. நாங்கள் பொதுவாக 90% அன்றாட செயல்பாடுகளை ஞாயிற்றுக்கிழமையன்று நிறுத்தி வைத்துவிடுவோம். தேவாலய செயல்பாடுகளில் பங்கேற்போம். இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய முடிவை வரவேற்கிறோம் என்றார்.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் எம்.என்.எஃப் ஆட்சியை பறிகொடுக்கும். எம்.என்.எஃப் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் அதிகமான இடங்களை பெறும். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதே நேரத்தில் எம்.என்.எஃப் அல்லது ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவே சாத்தியம்; இம்மாநிலத்தில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள்தான் கிடைக்கும் என்பதுதான் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications