Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் மீது கடும் கோபம்.. அம்பாதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்? ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு 10வது நாளில் விலகி உள்ள நிலையில் அதன் பின்னணி காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் அம்பாதி ராயுடு. தனது அதீத கோபம் காரணமாக கிரிக்கெட்டில் இளம்வயதில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கான விளையாடினார். இருப்பினும் இந்திய அணிக்காக அவர் நீண்டகாலம் விளையாடவில்லை. குறைந்த போட்டிகளில் மட்டுமே இந்திய ஒருநாள் அணிக்கு அவர் விளையாடினார்.

Why Former Indian and CSK cricketer Ambati Rayudu quits from YSR Congress Party? details here

மாறாக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும், அதன்பிறகு 2018 முதல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியிலும் விளையாடினார்.

மும்பை மற்றும் சென்னை அணியில் அவர் முக்கிய பிளேயராக வலம் வந்தார். இரு அணிகளுக்கும் பல போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் விரைவில் அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம்தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். இந்த வேளையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அவரை வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டனர். இத்தகைய சூழலில் தான் கட்சியில் இணைந்த 10 நாளில் நேற்று அம்பாதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக அம்பாதி ராயுடு நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவை செய்கிறேன். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். நன்றி'' என தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவர் எதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார் என்பதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தான் அம்பாதி ராயுடு ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதன் பின்னணி காரணம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அம்பாதி ராயுடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து குண்டூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

குண்டூர் என்பது அவரது சொந்த மாவட்டமாகும். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மற்றும் கிரிக்கெட் வீரராக தனது புகழ் உள்ளிட்டவற்றால் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற்று எம்பியாகி விடலாம் என அம்பாதி ராயுடு நினைத்தார். இதன்மூலம் அரசியலில் இன்னிங்ஸை தொடங்கலாம் என ஆர்வமாக இருந்தார்.

இத்தகைய சூழலில் தான் சில நாட்களுக்கு முன்பு நரசராவ்பேட்டை தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியான லவ்வு கிருஷ்ணதேவராயுலு பேசிய பேச்சு அம்பாதி ராயுடுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை குண்டூர் தொகுதியில் இருந்து போட்டியிடும்படி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். ஆனால் தனக்கு அதில் விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறினார்.

அம்பாதி ராயுடு குண்டூரில் போட்டியிட ஆர்வமாக உள்ள நிலையில் நரசராவ் பேட்டை எம்பியை அந்த தொகுதியில் போட்டியிடும்படி கூறியுள்ளதால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது அம்பாதி ராயுடு கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் தான் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 நாட்களுக்குள் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+