ஜிஎஸ்எல்வி எஃப் 14 செயற்கைக்கோள்.. "நாட்டிபாய்" செல்லப்பெயருக்கு காரணம் என்ன தெரியுமா? அடடே
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டை நாட்டி பாய் (Naughty Boy) என இஸ்ரோ விஞ்ஞானிகள் செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வானியல் முன்னறிவிப்புகளை முன் கூட்டியே பூமிக்கு தெரிவித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தடுக்கும் விதமாக இன்சாட் செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் ஏற்கெனவே 2013 இல் இன்சாட் 3டி செயற்கைகோளும் , 2016ஆம் ஆண்டு இன்சாட் 3 டிஎஆர் செயற்கைகோளும் விண்ணில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைய போகிறது. இதனால் இந்த செயற்கைகோள்களுக்கு உதவிடும் நோக்கிலும் வானிலை மாற்றங்களை துல்லியமாக விவரிக்கும் நோக்கிலும் நவீன செயற்கைகோளான இன்சாட் 3 டிஎஸ் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
இதற்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த ராக்கெட்டுகளின் பயன்பாடும் தேவையும் மிகவும் முக்கியமானது.
இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோள் 2,274 கிலோ எடை கொண்டது. இது விண்ணில் 10 ஆண்டுகள் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள் விண்ணில் சென்ற 18 நிமிடங்களில் 36 ஆயிரம் கிலோ மீட்ட தூரத்தில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இது செயல்படத் தொடங்கினால் நிலம் மற்றும் கடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை கொடுத்த வண்ணம் இருக்கும்.
இந்த செயற்கைகோள்கள் இடி, விமான போக்குவரத்தை எந்த நிலை வரை இயக்கலாம் என்பதை வழங்கும். அது போல் காட்டுத் தீ, புகை, பனி, பருவநிலை குறித்து ஆய்வுகளை நடத்தவும் வழிவகுக்கும்.
அந்த வகையில் இந்த இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோளை விண்ணுக்கு சுமந்து செல்வது எந்த ராக்கெட் தெரியுமா- ஜிஎஸ்எல்வி எஃப் 14! இன்சாட் 3 டிஎஸ்ஸை கொண்டு செல்லும் இந்த ராக்கெட்டிற்கு இது 16 ஆவது திட்டமாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை பயன்படுத்தி செல்வது இது 10ஆவது முறையாகும்.
இந்த ஜிஎஸ்எல்வி எஃப் 14 என்ற ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டி பாய் என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த ராக்கெட் கடந்த காலங்களில் இதுவரை நிறைய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் 40 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளது.
இன்சாட் 3டிஎஸ் இல்லாமல் ஏற்கெனவே 15 முறை விண்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் 6 மிஷன்களின் போது இந்த ராக்கெட் பிரச்சினைகளை சந்தித்தன. கடந்த ஆண்டு மே மாதம் கடைசியாக இந்த ராக்கெட் விண்வெளி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது அது வெற்றியடைந்தாலும் அதன் பிறகு விண்ணுக்கு சென்ற போது தோல்வியை சந்தித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications