சொந்தமாக சூடு வைத்துக்கொண்ட தாமரை! வி.கே பாண்டியனை சீண்டி.. பெரிய சிக்கலில் மாட்டிய பாஜக! இது வேறயா!
புவேனஸ்வர்: ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.
நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது, ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியைக் கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம்… ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?
விகே பாண்டியன் விமர்சனம்: இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.
ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்
ஸ்மிரிதி இராணி: அதேபோல் ஒடிசாவில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசுகையில், "பிஜு ஜனதா தளம் ஆட்சி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழ் காண்ட்ராக்டர் மூலமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜல்ஜீவன் மிஷன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய நிதிகளை ஒதுக்கினார். ஆனால் தமிழ்நாட்டின் காண்டிராக்டர்கள் அந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிதியும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழ்நாடு காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில வளங்களை கொள்ளையடிக்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக காண்ட்ராக்டர்கள் இடைவிடாது வேலை செய்து வருகின்றனர்" என்றார்.
எதிராக திரும்பும்: ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே பாஜக, இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆகும். இரண்டுமே தெலுங்கானா, ஆந்திராவில் முறையே வலிமையாக உள்ள கட்சிகள் ஆகும். இவை அணி சேராத கட்சிகள் என்பதால் இந்த கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மெஜாரிட்டி: பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். இதில் பிஜு ஜனதா தளம் இத்தனை காலம் பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி கட்சியாக இருந்தது. அதோடு லோக்சபா, ராஜ்ய சபாவில் பாஜகவின் திட்டங்களுக்கு வாக்களித்து வந்தது.
இப்போது வரும் தேர்தல் ரிப்போர்ட்டுகள் சில தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று கூறுவதால் இந்த அணி சேராத கட்சிகள் எங்கே செல்லும் என்பதை வைத்தே முடிவுகள் மாறும். இப்போது விகே பாண்டியனை சீண்டி பிஜு ஜனதா தளத்தையும் பாஜக மோசமாக சீண்டி உள்ளது.
வரலாறு என்ன?: அணி சேராத கட்சிகள் கொண்ட ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானாவில் நடந்த 2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், YSR காங்கிரஸ் கட்சி (YSRCP) 22 இடங்களையும் பெற்றன.
கூட்டணி படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 49 இடங்களையும், இந்திய கூட்டணி 8 இடங்களையும், ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற அணி சேராத கட்சிகள் எனப்படும் பிராந்திய கட்சிகள் கூட்டாக 39 இடங்களைப் பெற்றன.
ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 2019ல் NDA வெற்றி பெற்ற இடங்களில் 53% வாக்குகளைப் பெற்றது. இந்திய கூட்டணி 45% மற்றும் அணிசேரா கட்சிகள் 48% வாக்குகளைப் பெற்றன. அணிசேரா கட்சிகள் பெற்ற 8% வாக்குகள்தான் தொங்கு சட்டசபை உருவாகும் பட்சத்தில் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.
அணிசேரா கட்சிகள் போட்டியிடும் இடங்கள்: 2019 ஆம் ஆண்டில், மேற்கண்ட மாநிலங்களில் பாஜக 10% வாக்கு சதவிகிததிற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் 14 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் 10% வாக்கு சதவிகிதத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் 28 இடங்களை வென்றது.
அதே சமயம் அணிசேரா கட்சிகள் இந்த 4ம் கட்டத்தில் கடந்த 39 இடங்களைப் பெற்றன, YSRCP (22), BJD (2), TMC (4), பாரத் ராஷ்டிர சமிதி அல்லது BRS (9), மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், அல்லது AIMIM (2) இடங்கள் பெற்றன. டிஎம்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எந்த ஒப்பந்தத்திலும் இல்லாதது அதை அணிசேராது என்று வைத்துக்கொள்ளப்படும். தேர்தல் முடிந்த பின் இவர்கள் கூட்டணி வைக்கலாம்.
பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து இந்த கட்சிகள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.
இதில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் எதிராக உள்ளது. தெலுங்கானா ஆட்சி மாற்றம் காரணமாக பிஆர்எஸ் காங்கிரசை கொஞ்சம் கூடுதலாக எதிர்க்கிறது. YSRCP பாஜகவுடன் கொஞ்சம் நட்பாக உள்ளது. பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இப்போது பிஜு ஜனதா தளத்தை பாஜக பகைத்துக்கொண்டு உள்ளது. இது பாஜகவிற்கே எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பின் இந்த அணி சேர கட்சிகளின் முடிவுதான் மோடியின் ஹாட்ரிக் கனவை தீர்மானிக்கும்!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications