Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. அசத்தும் ஐடி தலைநகர்.. பெங்களூரின் இந்த ஒரு பகுதி வேகமாக வளர்கிறது! ஏன், எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் சிலிக்கான வேலி அழைக்கப்படும் பெங்களூர் ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. இருப்பினம் பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த பகுதி எது? ஏன் அந்த ஒரு பகுதி மட்டும் வேகமாக வளர்ந்து வருகிறது? என்பது பற்றி இந்த செய்தி பார்க்கலாம்.

பெங்களூர்.. சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்தகைய பெங்களூரு இந்தியாவின் முக்கியமான அடையாளம் என கூறினால் மிகையல்ல. ஏனென்றால் ஐடி எனும் தகவல் தொழில்நுட்பம், பிடி எனும் உயிரி தொழில்நுட்பம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் பெங்களூரில் தான் அமைந்துள்ளது.

Why North Bengaluru is booming? these are the main reasons, full details here

இதனால் தான் பெங்களூர் நகரை நோக்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் இயல்பாகவே பெங்களூர் நகரின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பெங்களூர் நகரையும் மேம்படுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

மேலும் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒரு காலத்தில் பெங்களூர் புறநகர் பகுதிகளாக இருந்த இடங்கள் தற்போது பெங்களூரின் முக்கிய இடங்களாகவே தற்போது மாறி உள்ளனர். அதோடு பெங்களூர் நகரும் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பெங்களூரை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என நான்காக பிரித்து கொண்டால், அதில் பெங்களூர் வடக்கு பகுதி தான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இதில் வளர்ச்சி என்பது மக்கள் தொகை மட்டுமின்றி அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளன. இதனால் பல நிறுவனங்கள் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை தொடங்கி வருகின்றன. இருப்பினும் இதற்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய காரணிகளை கவனத்தில் கொள்கின்றன.

அந்த வகையில் தான் தற்போது பல புதிய நிறுவனங்கள் பெங்களூர் வடக்கு பகுதியை நோக்கி படையெடுக்கின்றன. அதாவது பெங்களூர் வடக்கு பகுதி என்பது பானசவாடி, ஹென்னூர், ஜக்கூர், எச்பிஆர் லே-அவுட், ஜாலஹள்ளி, எலகங்கா, ஹெப்பால் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளாக உள்ளன. ஒரு காலத்தில் பெங்களூரின் புறநகர் பகுதியாக இந்த பகுதிகள் இருந்தன. ஆனால் தற்போது இந்த பகுதிகள் தான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த வளர்ச்சியின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

நீங்களே.. இந்த பகுதிகளை நன்கு உற்றுநோக்கினால் அதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். அதாவது ஆண்டுதோறும் இந்த பகுதிகளில் புதிய நிறுவனங்கள் வருகை தருகின்றன. குறிப்பாக இந்த பகுதிகளில் ஆராய்ச்சி நிறுவனங்கள், விண்வெளி சார் ஆய்வு நிறுவனங்கள், ஆட்டோமொபைல், மருந்து நிறுவனங்கள் வர துடிக்கின்றன.

Why North Bengaluru is booming? these are the main reasons, full details here

புதிதாக பல ஸ்டார்அப் பார்க் முதல் க்ரீன்ஃபீல்ட் லாஜிஸ்டிக்ஸ் பார்க் (greenfield logistics park)வரை இந்த பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் போயிங்க் (Boeing) விமான தயாரிப்பு புதிய வளாகத்தை இங்கு கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதோ ஃபாக்ஸ்கான் (Foxconn) தனது ஐபோன்களை உற்பத்தியை இங்கு தொடங்க உள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் தற்போது மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளது. இது வரும் காலத்தில் இந்த பகுதிகளை இன்னும் மேம்படுத்தும். இன்னொரு விஷயம் என்ன வென்றால் தேவனஹள்ளி விமான நிலையமாகும். இங்கு விமான நிலையம் அமைந்ததால் அந்த பகுதி வேகமாக வளர்ச்சியடைந்தது. இது மற்றொரு காரணமாகும். ஏனெ்னறால் பெங்களூர் வடக்கு பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக விமான நிலையத்தை சென்றடைய முடியும். இதனால் தான் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் அதிக குடியிருப்பு, வணிகம் சார்ந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் பெங்களூர் மையப்பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு வாடகை என்பது சற்று குறைவாகவே உள்ளது. இதனால் பலரும் இங்கு குடியேறி வருகின்றனர். மேலும் இந்த பகுதி பசுமையாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றியும் உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தொடர்ந்து இங்கு வருகின்றனர். இதனால் தற்போதைய சூழலில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் தற்போதைய அளவை விட இன்னும் கூடுதலாக வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுபற்றி கென் மஸ்டார்ட் வென்ச்சர்ஸ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவன பங்குதாரர் அனிருத் கெனி கூறுகையில், ‛‛பெங்களூர் வடக்கு தற்போது வளர்ந்து வரும் சந்தை என்றே கூறலாம். ஏனென்றால் பல நிறுவனங்கள் இங்கு புதிய கிளைகளை துவங்குவதில் ஆர்வமாக உள்ளன. நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம். மேலும் இந்த பகுதியின் அருகே உள்ள விமான நிலையம், வரும் மெட்ரோ நிலையங்கள் இன்னும் பலமாக அமைகின்றன.

வடக்கு பெங்களூரில் பிறந்து வளர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் கூறுகையில், ‛‛எனது சிறு வயதை ஒப்பிடும்போது இப்போது இந்த பகுதியில் அதிகமானவர்கள் குடியேறி வருகின்றனர்'' என்றார். இதுபற்றி இம்ப்ரேசரியோ என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட்டின் தென்னிந்திய வணிகத் தலைவரான ரன்வீர் சபானி கூறுகையில், ‛‛இந்த பகுதி விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் இந்த பகுதிகளில் குடியேறுகின்றனர்'' என்றார்.

Why North Bengaluru is booming? these are the main reasons, full details here

மேலும் ஃப்ரெண்ட்லி ரியல்டர்ஸ் அண்ட் ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் அந்தோணி ராஜ் கூறுகையில், ‛‛எலகங்காவில் ஒரு காலத்தில் மக்கள் வாழ பயந்தனர். ஏனென்றால் அப்போது இந்த பகுதி பசுமையாக மரங்களாக மட்டுமே இருந்தது. அப்போது வெளிவட்ட சாலை என எதுவும் இல்லை. இப்போது இந்த பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக மான்யதாடெக் பார்க், விமான நிலையம் உள்ளிட்டவை முக்கிய பங்காற்றியது. தற்போதும் அதிகமானவர்கள் குடியேறி வருகின்றனர்'' என்றார்.

மான்யதா டெக் பார்க் என்பது ஹெப்பால் அருகே உள்ள நாகவரா பகுதியில் அமைந்துள்ளது. இது எம்பஸ்ஸி குழுமத்தின் நிறுவனமாகும். இந்த டெக் பார்க் கடந்த 2006ல் தொடங்கப்பட்டது. தேவனஹள்ளியில் விமான நிலையம் 2008 ல் தான் கட்டப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே மான்யதா டெக் பார்க் என்பது ஹெப்பாலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என ஏராளமானவை ஹெப்பால் உள்பட வடக்கு பெங்களூருக்கு வந்தது என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+