ராணுவ பலத்தை விடுங்க! அதை விட பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்னை இருக்கு! மொத்த நாடே கூட திவால் ஆகலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது இரு தரப்பிற்கும் இடையேயான போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பொதுவாக ஒரு போர் வெடித்தால் எவ்வளவு செலவாகும். தற்போதுள்ள சூழலில் போர் நடத்தும் அளவுக்குப் பொருளாதார வலிமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் நேற்றிரவு இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது. வடமேற்கில் பல்வேறு பகுதிகளையும் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எல்லா தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

Why Pakistan Cannot Afford Another War with India in 2025

போரால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. ஆனால், போர் என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஒரு போர் வெடித்தால் பல்வேறு இழப்புகள் ஏற்படலாம். குறிப்பாகப் போரால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மிக அதிகம். ஒரு போர் வெடித்தால் எவ்வளவு செலவாகும் என்பதைப் பார்க்கலாம்.

செலவுகள்

எந்தவொரு போருக்கும் மிக அதிகச் செலவாகும். ஒட்டுமொத்தச் செலவு என்பது பல அம்சங்களைப் பொறுத்தே இருக்கும். ஒரு நாடு எங்கே அமைந்துள்ளது தொடங்கி மோதல் எந்தளவுக்கு இருக்கிறது.. உலக நாடுகளின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது உட்பட பல்வேறு காரணங்களைப் பொறுத்துப் போர் செலவு மாறுபடும். இதனால் போருக்குத் துல்லியமாக எவ்வளவு ஆகும் என்பதைக் கணிப்பது கடினம். இருப்பினும், குறுகிய காலம் நீடிக்கும் வழக்கமான போருக்கு ரூ.1,460 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை (அவுட்லுக் பிஸ்னஸ் கணிப்பு) செலவாகும். போர் பெரிதாக வெடித்தால் செலவுகள் இன்னுமே கூட அதிகரிக்கலாம்.

இது போரால் ஏற்படும் செலவு மட்டுமே.. இது தவிரப் போர் வெடிக்கும்போது அதனால் பொருளாதார இழப்புகளும் கூட ஏற்படும். அந்தப் பொருளாதார இழப்பு என்பது ​​தினசரி $17.8 பில்லியன் (ரூ.1.34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று ஐக்கிய அமீரகத்தின் மன்றம் கணித்துள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்

நாம் கடந்த கால டேட்டாக்களை வைத்து ஆய்வு செய்யும்போது இந்தியா பாகிஸ்தான் இடையே சிறிய போர் வெடித்தாலும் இந்தியாவுக்கு $1.8 பில்லியனை இழக்கக்கூடும். அதேபோல பாகிஸ்தான் $1.2 பில்லியனையும் இழக்க நேரிடும். தொடர்ந்து பங்குச்சந்தை முதலீடு சயும். ரூபாய் மதிப்பு குறையும். இதுபோல பல செயின் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஏற்படும்.

இதனால் இரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்றாலும் கூட அதை இந்தியாவால் சமாளிக்க முடியும். உலகின் டாப் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதனால் போரினால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க முடியும். மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையை இந்தியாவால் எடுக்க முடியும்.

மிக மோசம்

ஆனால், பாகிஸ்தான் கதை அப்படி இல்லை. ஏற்கனவே பொருளாதாரம் அங்கு மிக மோசமாகத் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் கை ஏந்தும் சூழலே இருக்கிறது. அவர்கள் உதவியைக் கட் செய்தாலே பாகிஸ்தான் நிதிநிலை மிக மோசமாகப் போய் விடும். இதுபோக எரிபொருள் பற்றாக்குறை, எனர்ஜி பற்றாக்குறை என எல்லாவற்றிலும் பாகிஸ்தானுக்குப் பிரச்சினை தான். சமீபத்தில் வெளியான டேட்டாவில் போர் வெடித்தால் பாகிஸ்தானுக்கு 4 நாட்களுக்குத் தேவையான வெடி மருந்துகள் மட்டுமே இருப்பதாகக் கூட ரிப்போர்ட்களில் தெரிவிக்கப்பட்டன.

திவால் கூட ஆகலாம்

இதனால் ஒரு போர் வெடித்தால் அதை நிச்சயம் அவர்களால் சமாளிக்க முடியாது. ராணுவ பலம் ஒரு பக்கம் என்றாலும் போரைத் தாங்கும் பொருளாதார வலிமை பாகிஸ்தானுக்கு இல்லை. எனவே, பாகிஸ்தான் சும்மா முஷ்டியை முறுக்கினாலும் போரை ஆரம்பிக்க வாய்ப்பு குறைவு! அப்படி ஆரம்பித்துப் போர் நீண்டால் அது பாகிஸ்தானையே திவால் ஆக்கிவிடவும் கூட வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+