பறவை காய்ச்சலால் குழந்தை பலி.. என்ன நடந்தது! கோழிக்கறி சாப்பிடும்போது தப்பி தவறியும் இதை செய்யாதீங்க
அமராவதி: ஆந்திராவில் சிக்கன் சாப்பிட்ட 2 வயது குழந்தைக்குப் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது சிக்கன் சாப்பிட்டால் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடந்தது.. சிக்கன், முட்டை பாதுகாப்பானது தானா அதைச் சாப்பிடலாமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் அசைவ பிரியர்கள் அதிகம் உண்ணும் உணவாக சிக்கன் உள்ளது. உடலுக்குத் தேவையான புரதத்தையும் சிக்கன் மூலம் எளிதாகப் பூர்த்தி செய்யலாம் என்பதால் வாரம் ஒருமுறையாவது பலரும் சிக்கன் சாப்பிடுகிறார்கள். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாகவே பறவை காய்ச்சல் தகவல்கள் சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.

பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல் காரணமாக லட்சக் கணக்கில் கோழிகள் கொல்லப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் H5N1 வைரஸ் எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவுவதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாகக் கோழிப் பண்ணைகள் மற்றும் பறவை சந்தைகள் ஆகிய அதிக ஆபத்தான பகுதிகளில் கண்காணிப்பை பணிகளைத் தீவிரப்படுத்தக் கேட்டுக்கொண்டு இருந்தது.
ஆந்திர சிறுமி
பறவை காய்ச்சல் என்பது மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே சொல்லப்பட்டது. இதற்கிடையே ஆந்திராவில் 2 வயதே ஆன சிறுமி பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த சிறுமிக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் 4ம் தேதி அந்த மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின் போது அந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏனென்றால் பறவை காய்ச்சல் பொதுவாக மனிதர்களுக்குப் பரவாது. அப்படியிருக்கும் போது குழந்தைக்குப் பறவை காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்பது பலருக்கும் குழப்பமாகவே இருந்தது.
பச்சை சிக்கன்
இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு சிக்கன் வாங்கி வந்துள்ளனர். அப்போது அந்த பச்சை சிக்கனை ஒரு துண்டு பச்சையாகச் சமைக்காமல் கொடுத்துள்ளனர். அதன் மூலமே சிறுமிக்குப் பறவை காய்ச்சல் ஏற்பட்டது தெரிய வந்தது. அதேநேரம் குடும்பத்தில் மற்றவர்கள் யாருக்கும் பறவைக் காய்ச்சல் இல்லை என்பது சோதனையில் உறுதியானது. ஒருவேளை அது மற்றவர்களுக்கும் பரவியிருந்தால் பேராபத்தாகவே இருந்து இருக்கும்.
சிக்கன் மூலம் அந்த சிறுமிக்குப் பறவை காய்ச்சல் பரவியிருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மேலும், இது பல்வேறு கேள்விகளையும் எழுப்புவதாகவே இருக்கிறது. சிக்கனை சாப்பிடலாமா.. முட்டை சாப்பிடலாமா.. இல்லை நமக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு வருமா என பல வித கேள்விகள் எழுந்துள்ளன.
சிக்கன் சாப்பிடலாமா?
சிக்கனை சாப்பிடுவதில் எந்தவொரு நோய்ப் பாதிப்பும் ஏற்படாது. நமக்கு சிக்கனை முறையாகச் சமைத்துச் சாப்பிடும்போது அதில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் இருந்தாலும் அழிந்துவிடும். 70 டிகிரி செல்சிஸை தாண்டி சமைக்கும்போது வைரஸ் முழுமையாக அழிந்துவிடும். இதனால் முறையாகச் சமைத்துச் சாப்பிடும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. இந்தச் சம்பவத்தில் கூட அந்த குழந்தை பச்சையாக சிக்கன் சாப்பிட்டதே வைரஸ் பாதிப்பு ஏற்படக் காரணம். குடும்பத்தினர் அதை சிக்கனை தான் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.. ஆனால், அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
தவிர்க்க வேண்டியது என்ன?
அதாவது சிக்கன் முட்டை என எதுவாக இருந்தாலும் முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் எந்தவொரு பாதிப்பும் வராது. அதேநேரம் பச்சை முட்டை, ஆஃப் பாயில், கலக்கி அல்லது முறையாகச் சமைக்கப்படாத சிக்கனை சாப்பிட்டால் ஆபத்து அதிகம்!
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications