தமிழர்கள் கறுப்பர்களாம்... பாஜகவின் தருண் விஜய் திமிர் பேச்சால் சர்ச்சை!
தமிழர்கள் உட்பட தென்னிந்திய மக்களை கறுப்பர்கள் என பாஜகவின் தருண் விஜய் இழிவாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: தமிழர்களை கறுப்பர்கள் என பாஜகவின் மாஜி எம்.பி. தருண் விஜய் திமிருடன் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியில் அண்மையில் ஆப்பிரிக்கா மாணவர்கள் தாக்கப்பட்டது சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் திமிருடன் கூறியதாவது:

இந்தியர்கள் இனவெறியர்கள் இல்லை. நாங்கள் இனவெறியர்களாக இருந்தால் எப்படி தென்னிந்திய மக்களுடன் இணைந்து வாழ முடியும்?
இந்தியாவிலும் கறுப்பர்கள் உள்ளனர். எங்களைச் சுற்றியும் கறுப்பின மக்கள் (தமிழர்கள்) உள்ளனர்.
நீங்கள் உங்களுடைய மூதாதையர்களை, கலாசாரத்தை மறுத்துவிட முடியாது. இந்தியர்கள் நாங்கள் கறுப்பு நிற கிருஷ்ணனைத்தான் கடவுளாகவும் வணங்குகிறோம்.
இவ்வாறு தருண்விஜய் கூறியிருந்தார்.
Mywords perhaps were not enough to convey this.Feel bad,really feel sorry, my apologies to those who feel i said different than what I meant https://t.co/I7MddEJk5W
— Tarun Vijay (@Tarunvijay) April 7, 2017
இந்தியர்கள் இனவெறி இல்லை என்பதை நியாயப்படுத்தப் போய் தமிழர் உள்ளிட்ட தென்னிந்திய மக்களை கறுப்பர்கள் என கேவலமாக விமர்சித்து ஆரிய இனவாதத்தை தருண்விஜய் வெளிப்படுத்தியிருப்பதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் வருத்தம் தெரிவிப்பதாக ட்விட்டரில் தருண்விஜய் பதிவிட்டுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications