கர்நாடகாவில் விதவை தாயை சீரழித்து குழந்தைகள் முன்பு கொலை செய்த 3 பேர்
பெங்களூர்: கர்நாடகாவில் விதவை தாய் ஒருவர் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி(28). கணவனை இழந்த அவர் இரண்டு குழந்தைகளை தனியாக வளர்த்து வந்தார். துப்புரவு தொழிலாளியாக அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை தேமஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ், தவ்ரே சாமி மற்றும் நந்தா ஆகியோர் ஒரு புதருக்கு தூக்கிச் சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காராம் செய்தனர்.
பின்னர் அவரை கொலை செய்தனர். தங்கள் தாயை விட்டுவிடுமாறு குழந்தைகள் கதறியும் அவர்கள் லக்ஷ்மியை விடவில்லை. அந்த 3 பேரும் குழந்தைகளிடம் உங்களையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். குழந்தைகள் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து ஊர் மக்களை அழைத்து வர ஓடினர்.
கிராமத்தினர் வருவதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். போலீசார் வந்து பார்த்தபோது லக்ஷ்மியின் உடல் கபினி கால்வாயில் கிடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் லக்ஷ்மியின் குடும்பத்தாருக்கு தேசிய சபாய் கர்மாச்சாரி கமிஷன் தலைவர் ஷிவண்ணா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மேலும் ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலையை லக்ஷ்மியின் குடும்பத்தாரிடம் அவர்அளித்தார். இது தவிர லக்ஷ்மியின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரை கேட்டுக் கொண்டார்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications