வீட்டிலேயே விபச்சாரம் நடத்திய மனைவி – போலீசிடம் மாட்டிவிட்ட கணவர்!
அஜ்ஜாவர், கர்நாடகா: கர்நாடக மாநிலம் சுள்ளியா என்ற பகுதியில் கணவர் வீட்டில் இல்லாத போது விபசாரம் நடத்தி வந்த மனைவியை கார் டிரைவரான கணவரே கையும் களவுமாக போலீசில் பிடித்து கொடுத்துள்ளார். மேலும் இவ்வழக்கில் அவருடன் ஒரு பெண் உள்பட 2 பேர் சிக்கியுள்ளனர்.
தட்சிண கன்னட மாவட்டம், சுள்ளியா தாலுகா, அஜ்ஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் ஒரு கார் டிரைவர்.
இவரது மனைவி ஷோபா 35 வயதான பெண்மணி. ஷோபா தனது கணவர் வெளியே சென்றவுடன், தனது வீட்டில் விபசாரம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியை கண்டித்த கணவன்:
இதுகுறித்து தகவல் அறிந்த குமார், மனைவி ஷோபாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து விபசாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இரவில் வீடு திரும்பல்:
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குமார் வெளியே சென்றிருந்தார். பின்னர் இரவில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிலேயே விபச்சாரம்:
அப்போது குமாரின் வீட்டில் ஜெயநகரை சேர்ந்த ஆஷா, சுள்ளியாவில் உள்ள தனியார் கல்லூரி ஊழியர் கருணாகர் ஆகியோர் விபரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரது மனைவி ஷோபாவும் வீட்டின் உள்ளே இருந்துள்ளார்.
வெளியிலே பூட்டு:
இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், 3 பேரையும் வீட்டினுள் வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டியுள்ளார்.
சிறைபிடித்த மக்கள்:
பின்னர் சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் குமாரின் வீட்டிற்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்தனர்.
விரைந்து வந்த போலீசார்:
மேலும் சம்பவம் பற்றி சுள்ளியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விபச்சார புரோக்கரான மனைவி:
விசாரணையில் குமாரின் மனைவி ஷோபா விபச்சார புரோக்கராக செயல்பட்டதும், தனது கணவர் வெளியே செல்லும் நேரத்தில் அவர் வீட்டில் வைத்து விபச்சாரத் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
3 பேரும் கைது:
இதையடுத்து ஷோபா, ஆஷா, கருணாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பான பகுதி:
வீட்டில் விபசாரம் நடத்தி வந்த மனைவியை, கணவனே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications