மனைவியின் செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம்... கணவருக்கு அரிவாள் வெட்டு
உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது செல்போனை ஆராய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவரை அரிவாளால் வெட்டினார்.
லக்னோ: மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்களை கணவர் பார்க்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்றைய காலகட்டங்களில் கணவருக்கு வரும் கடிதாசிகளை மனைவியும், மனைவிக்கு வரும் கடிதங்களை கணவரும் பார்த்து படித்தனர். எந்த ஒளிவு மறைவுமின்றி இருந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் கணவர், மனைவி ஆகியோருக்கு வரும் பார்சல், கடிதங்களை படிப்பது என்பது நாகரீகம் இல்லை என்றாகிவிட்டது. அதேபோல் செல்போன்களில் வரும் எஸ்எம்எஸ், இ-மெயில்களையும் பரஸ்பரம் மாறி படிப்பதில்லை.

நம்பிக்கை அதிகம்
இதற்கு காரணம் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம் என்று சொல்லலாம். இருவரும் பரஸ்பரம் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.

லக்னோவில்...
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நேத்ரபால் சிங்(21), நீது சிங்(19) ஆகியோர் ஆவர். இருவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.

வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீது சிங் கலந்து கொண்டார். நீது சிங் வாட்ஸ் அப் மூலம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேத்ரபால் சிங் போனை கேட்டுள்ளார்.

நீது மறுப்பு
போனை தர நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியிடம் இருந்து போனை பறித்துள்ளார். இதில் கோபமடைந்த நீது, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications