சேர்ந்து "சரக்கு" அடித்து விட்டு திரும்புகையில் சண்டை.. துரத்தி துரத்தி கணவரை சுட்ட மனைவி!
கணவர்- மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த மனைவி கணவரை துரத்தி சென்று துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார்.
பெங்களூர்: கணவர்- மனைவிக்கிடையே குடும்பத் தகராறு குறித்து விவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்தார். இதனால் கோபமடைந்த மனைவி, கணவரை துரத்தி சென்று துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார்.
ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சாய்ராம் (53), தன் மனைவி அம்சாவுடன் (48) வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் காரை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்தினர். பின்னர் ஏதோ ஒரு விஷயம் குறித்து விவாதித்தபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பளார் அறை
காருக்குள் வைத்து நடந்த கருத்து வேறுபாடால் கோபமடைந்த சாய்ராம், மனைவி அம்சாவை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்தார் அம்சா. ஆவேசமடைந்த அம்சா, காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சாய்ராமை நோக்கி சுட்டார்.

டுமீல் டுமீல்
இதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். சற்றும் எதிர்பாராத நேரத்தில் சாய்ராமை நோக்கி அம்சா சுட்டதால் சாய்ராம் அதிர்ச்சி அடைந்தார். தோட்டா குறி தவறாமல் சாய்ராமின் வயிற்று பகுதியில் பாய்ந்து கிழித்தது.

தப்பி ஓட்டம்.. விடாமல் சுட்ட மனைவி
தப்பினால் போதும் என நினைத்த சாய்ராம், காரை விட்டு இறங்கி அவ்வழியாக சென்ற பேருந்தில் ஏறினார். எனினும் காரை எடுத்துக் கொண்டு அந்த பேருந்தை அம்சா துரத்தினர்.

மவனே ஓடவா பார்க்குறே!
ஒரு இடத்தில் பேருந்தை மடக்கி பிடித்த அம்சா, கொலைவெறியுடன் பேருந்தில் ஏறி சாய்ராமை கொல்ல முயற்சித்தார். அப்போது சக பயணிகளை சாய்ராமை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக தகவலறிந்த போலீஸார் அம்சாவை கைது செய்தனர். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாராம்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications