3வது தலாக் சொல்ல முயன்றபோது.. வெகுண்டெழுந்த மனைவி.. வைரலாகும் வீடியோ
3 முறை தலாக் சொன்ன கணவனை மனைவி சரமாரியாக தாக்கினார்.
பாட்னா: எத்தனை நாள் ஆத்திரமோ தெரியல, புருஷனை உண்டு இல்லைன்னு கவனிச்சிட்டார் அவரது மனைவி!! முசாபர் நகரை சேர்ந்தவர் துலாரே. இவரது மனைவி சோனியா.
இவங்க ரெண்டு பேருக்கும் 2 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆனது. நல்லாதான் வாழ்க்கை போய்ட்டு இருந்தது. ஆனால் கடந்த 5 மாசத்துக்கு முன்னாடி சண்டை ஸ்டார்ட் ஆயிடுச்சு.
பிரச்சனை போக போக சரியாயிடும் என்று இருவருமே பார்த்தார்கள். அது முடியாமல், அதிகமாகி கொண்டே தான் போனது. இதனால் இப்படி சண்டை போடுற பொண்டாட்டி தனக்கு வேண்டாம் என்றும், பேசாமல் டைவர்ஸ் பண்ணிடலாம் என்றும் முடிவு செய்தார் துலாரே.

கிராம மக்கள்
அதனால் தன் குடும்பத்தில் இதை பற்றி சொன்னார். அவர்களும் உடனே பஞ்சாயத்தை கூட்டினார்கள். ஊருக்கு பொதுவாக கிராம மக்கள் எல்லோரும் கூடினார்கள். கணவன்-மனைவிக்கு ஆளுக்கு ஒரு சேர் போட்டு உட்கார வைத்தார்கள். எதிரெதிர் புறம் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.

3 முறை தலாக்
இப்போது இருவரையும் சமாதானப்படுத்தி வாழ வைக்கலாம் என்று ஊர் பெரிசுகள் முயற்சி செய்தார்கள். ஆனால் துலாரே அதற்கு ஒத்து வரவேயில்லை. அதனால் தலாக் சொல்லி முடிச்சி விட்டுவிடலாம் என்று ஊர்மக்கள் முடிவுக்கு வந்தார்கள். அதன்படி துலாரேவை 3 முறை தலாக் சொல்ல சொன்னார்கள்.

தெம்பில் துலாரே
துலாரேவும் தலாக் சொல்ல ஆரம்பித்தார். 2 முறை சொல்லிட்டார், 3-வது முறை சொல்ல போனார். ஆனால் அதற்கு முன்பு சேரில் உட்கார்ந்திருந்த சோனியா படக்கென எழுந்து, துலாரேவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சோனியாவை விட்டு பிரிய போகிறோம் என்று நினைத்து தெம்பாக உட்கார்ந்திருந்த துலாரே இதை எதிர்பார்க்கவே இல்லை.
திருப்பி அடித்தார்
ஊர் ஜனங்க மத்தியில் மனைவி தன்னை அடித்தது ரொம்பவும் அவமானமாகி விட்டது துலாரேவுக்கு. அதனால் கோபம் தலைக்கேறி சோனியாவை திருப்பி அடித்தார். இருவரும் தொடர்ந்து தாக்கி கொள்ளவும், அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தடுத்தனர். சோனியா பளார் பளார் என்று புருஷனை அடித்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications