Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ரோஜா கைதாகிறாரா?! "ஆடுதாம் ஆந்திரா"வில் ரூ 150 கோடி மோசடி புகார்! அப்போ திருப்பதி முறைகேடு?

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ரோஜா மீது ரூ 150 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஜா செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஆந்திர மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் ஆட்சி செய்தது. அப்போது அந்த கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, கடைசி இரண்டரை ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்தார்.

roja andhra police

அவருக்கு சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் பல விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். அது போல் ஆந்திராவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ரூ 150 கோடி: இதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ 150 கோடி நிதியை ஒதுக்கியது. இந்த திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் தேசிய கபடி வீரரும் ஆத்யா- பாட்சா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.டி.பிரசாத் புகார் அளித்திருந்தார்.

ரோஜா மீது புகார்: இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.கே.ரோஜா, கிருஷ்ணதாஸ் ஆகியோர் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ போலீஸார் விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது. நடிகை ரோஜாவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அது போல் ஆந்திர மாநில டிஜிபியும் நடிகை ரோஜா, கிருஷ்ணதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைவில் கைதாகிறாரா ரோஜா: இதனால் நடிகை ரோஜா விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்தவர் நடிகை ரோஜா. இந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக ரோஜா கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

விஐபி பிரேக் தரிசனத்தில் முறைகேடு: கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது விஐபி பிரேக் தரிசனத்தில் முறைகேடுகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது புதிதாக அமைந்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு கண்டுபிடித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே ஒரு விஐபி தரிசன டிக்கெட்டில் நிறைய பேர் சென்றது அம்பலமாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை: அது போல் பலருக்கு வரம்பை மீறி சிபாரிசு கடிதங்களை வழங்கியதும் தெரியவந்தது. சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரோஜா செல்வமணி, பெட்டிரெட்டி ராமசந்திர ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ஆகியோர் யாத்ரீகர்களுக்கு ஒதுக்கீட்டு வரம்பை மீறி பரிந்துரை கடிதங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்துள்ளது.

விஐபி பிரேக் தரிசனத்தில் 54 பக்தர்கள்: அமைச்சராக இருந்த ரோஜாவும் தன்னுடன் ஏராளமானவர்களை அழைத்துச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினரும் ஜனசேனா நிர்வாகிகளும் புகார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டியும் ஒரே நேரத்தில் 54 பக்தர்களை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

ரூ 100 கோடி மோசடி: இது மட்டுமல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் மோசடி குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சியில் ரூ 100 கோடி வரை மோசடி செய்ததாக அமைச்சராக இருந்த ரோஜா மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் விஐபி பிரேக் தரிசன மோசடியும் சேர்ந்து கொண்டுள்ளதால் ரோஜாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நகரியில் தோல்வி: தற்போது ஆடுதாம் ஆந்திராவுடன் இந்த திருப்பதி மோசடியும் இணைந்தால் ரோஜாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது. அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா படுதோல்வி அடைந்தார். இவர் ஏற்கெனவே இரு முறை அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+