ஆம் ஆத்மிக்கு ஆதரவில்லை, 50 சுயேட்சைக்களுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம்: ஹசாரே முடிவு
ஜல்னா: தனது 17 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத ஆம் ஆத்மிக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை.. அதற்குப் பதிலாக 50 சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்து இந்தியா முழுவதும் பிரசாரம் செய்வேன் என சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே. இவரைத் தனது குரு என அழைத்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரேவின் வார்த்தையையும் மீறி அரசியல் கட்சி ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். ஆனால், சிலப்பலக் காரணங்களுக்காக தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளால் அன்னா ஹசாரேயிடையே இருந்த நெருக்கம் குறைந்தது. இதற்கிடையே சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசிய ஹசாரே, அவரைப் புகழ்ந்து பேட்டியளித்திருந்தார்.
இதனால் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மம்தாவுக்கு ஹசாரே ஆதரவு அளிப்பார் எனக் கருத்து நிலவியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து விளக்கியிருக்கிறார் ஹசாரே.
இது தொடர்பாக நேற்று அவர் மராட்டிய மாநிலம் ஜல்னா அருகே உள்ள துலேகாவ்-ராஜா என்ற இடத்தில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-

17 அம்ச திட்டங்கள்...
தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக 17 அம்ச திட்டங்களை தயாரித்து இருக்கிறேன்.

சுயேட்சைகளுக்கு ஆதரவு...
நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 50 சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதில் மராட்டியத்தில் மட்டும் 12 வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

மம்தாவுக்கும் ஆதரவில்லை...
எனது 17 அம்ச திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்று கொண்டார். அதில், நான் ஏன் அவருக்கு ஆதரவு அளித்து உள்ளேன் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

எனது ஆதரவு வேட்பாளர்கள்...
நான் ஆதரவு அளிக்கும் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பின் காங்கிரசுக்கோ அல்லது பா.ஜனதா கட்சியினருக்கோ யாருக்கும் இசைந்து கொடுக்க மாட்டார்கள்.

தரதேவுக்கு ஆதரவு தாருங்கள்...
ஜல்னா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்து இருக்கும் தரதேவுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஆம் ஆத்மிக்கு ஆதரவில்லை....
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் எனது 17 அம்ச திட்டத்தை ஏற்று கொள்ளவில்லை. ஆகையால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேனா? என்ற கேள்விக்கே இடமில்லை' என இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications