லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்: எல்.கே. அத்வானி
டெல்லி: லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிட விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த முறை அவர் டெல்லி சட்டசபை மூலம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது:

நான் ராஜ்யசபா செல்வது குறித்து எதுவும் சொல்லவில்லை. சிலர் இதுபற்றி என்னிடம் கூறினால் நான் அதை ஆலோசிப்பேன். ஆனால் இது இயற்கை தான். நான் அதுபற்றி சிந்தித்து இருந்தால் முன்னதாகவே நான் ராஜ்யசபா எம்.பி.யாகி இருப்பேன்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தான் எனது எண்ணம். குடியரசு தின அணிவகுப்பில் கனரக ஆயுதங்கள் தொடக்கத்திலேயே இடம்பெற்றது நல்ல முடிவு தான். இதற்கு முன்னர் நடந்த அணிவகுப்புகளில் இவை இறுதியாகத்தான் இடம்பெறும்.
நல்ல நிர்வாகத்துக்கு கல்வி, சுகாதாரம் ஆகியவையும் முக்கியம். என்றாலும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு அமையும் என்று நம்புகிறேன் என்றார்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications