அண்டை நாடுகளுடன் 'கண்ணுக்கு கண்' பாணியைத்தான் கடைபிடிக்க வேண்டும்: நரேந்திர மோடி
அகமதாபாத்: பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் கண்ணுக்கு கண் என்ற யுக்தியைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஏ.பி.பி. செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

காலை பணி..
பொதுவாக காலை 5 மணிக்கு நான் எழுந்துவிடுவேன்.. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த காலத்தில் இருந்தே இதுதான் என் பழக்கம். குறைவான நேரம்தான் தூங்குவேன்.. மருத்துவர்கள் கூட இதுபற்றி என்னிடம் குறைபட்டுக் கொள்வர்.

ஷாருக்கான், அமீர்கான் .. படங்கள்..
திரைப்படங்களைப் பார்க்க கடவுள் எனக்கு நேரம் கொடுக்க வேண்டும். இருவரது படங்களையும் பார்க்கலாம்.

பாலிவுட் ஆதரவு..
பாலிவுட் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.. நான் முதல்வரான பின்னர் சில நடிகர்கள் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.

மகாராஷ்டிராவில் இரு சேனாக்கள் இருப்பது பற்றி..
தனிப்பட்ட உறவுகளை அரசியலில் இழுத்துவிடக் கூடாது.

கூர்க்காலாந்து பற்றி..
பிராந்திய உணர்வுகளை நீங்கள் ஒடுக்கினால் அது பிரளயமாக வெடிக்கும்.

பேலூர் மடம் பற்றி
அங்கு நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறேன்.. அது வேறு ஒரு உலகம்..

பணிகள் முடிந்த பின்னர் என்ன செய்வீர்கள்?
எனக்கு ஓய்வு நேரமே கிடையாது. நான் வேலை வேலை என்று இருக்கக் கூடிய நபர். இப்போது நான் குஜராத் திரும்பினேன்.. இடிமழை என கேள்விப்பட்டேன். உடனடியாக அதை கவனிக்க வேண்டும்.

நாட்டின் பிரதமராக யு.எஸ். பயணம் மேற்கொள்வீர்களா?
மிக அதிகமான சுமைதரக் கூடிய கேள்வி..

பாகிஸ்தான் பற்றி..
இப்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளுடன் கண்ணுக்கு கண் என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தாக வேண்டும்.

கிலானியை சந்திக்க தூதர்கள்?
காஷ்மீரின் கிலானியை சந்திக்க தூதர்களை அனுப்பியதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளித்தது. இப்போது அந்த பிரச்சனை ஓய்ந்துவிட்டது என கேள்விபட்டேன்.

இதர கட்சிகளின் ஆதரவு?
எங்களுக்கு இதர கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது என்றே கருதுகிறேன். அப்படி ஒரு ஆதரவு தேவைப்பட்டால் ஒவ்வொருவரது ஆதரவையும் கோருவோம். அமேதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அதற்கு வாய்ப்பு குறைவு என்ராலும்.. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஒத்துழைப்போம்.

மோடி யார்?
என்னைப் பற்றி நானே தீர்மானித்து சொல்வதற்கான அதிகாரத்தை கடவுள் எனக்கு தரவில்லை.

ராகுல் சொல்வதைப் போல தொழிலதிபர்களுக்கானது உங்கள் குஜராத் அரசு?
தயவு செய்து புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.. நான் விவசாயிகள், சிறு தொழிலதிபர்கள், பருத்தி விவசாயிகள் என பலதரப்பினருடன் இணைந்து பணியாற்றுகிறேன். மண் வள அட்டைகளை விநியோகித்து இருக்கிறோம். இதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும்தானா?

அம்பானி, அதானிகள் பற்றி?
இது ஊடகங்களின் கேள்விகள் அல்ல.. எதிர்க்கட்சிகள் எழுப்புகிற கேள்விகள் இவை.. என்னுடைய அரசு பற்றி கேள்வி கேளுங்கள்..

கருப்பு பணத்தை கொண்டு வருவது பற்றி?
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை திரும்ப கொண்டுவருவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். இதற்கு சர்வதேச சட்டங்களின் உதவியும் அவசியம்.

முஸ்லிம்களுடன் மீண்டும் நட்புறவு கொள்வது பற்றி?
எனக்கு இப்போது தேசிய அளவிலான பொறுப்பு இருக்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடனும் இணைந்து நிற்கவே விரும்புகிறேன். உங்கள் மொழியில் பேச விரும்பவில்லை.

நீங்கள் ராஜதர்மத்தை கடைபிடித்திருக்கிறீர்கள்?
எல்லாவற்றையும் எனது பேட்டியில் சொல்லியிருக்கிறேன். பார்த்து கொள்ளுங்கள்.

உங்களை விமர்சனம் செய்தோர் பாகிஸ்தானுக்கு போக வேண்டுமா? முஸ்லிம்கள் பற்றி..
2002ஆம் ஆண்டு முதல் எனது பேச்சைக் கேட்டுப் பாருங்கள் தெரிந்து கொள்வீர்கள்

நீங்கள் பிரதமரானால் ஆர்.எஸ்.எஸ். தலையீடு பற்றி?
அரசு என்பது இந்தியாவுக்கானது.. நாட்டின் வளர்ச்சிக்கானது..

பாஜக மற்றும் தே.ஜ. கூட்டணியில் உங்களை முன்வைத்து சிக்கல்கள்..
நான் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை.. எவரிடமிருந்தும் பறித்ததும் இல்லை

உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி..
என்னை தோற்கடிக்க முடியாதவர்களின் விரக்தியின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய வேட்புமனுவை வைத்து மமதா விமர்சிப்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. மக்கள் தீர்மானிப்பார்கள்..

மமதா பற்றி..
மமதா எங்களுடன் இணையமாட்டார். இடதுசாரிகள் உருவாக்கிய அழிவில் இருந்து மேற்கு வங்கத்தை மீட்க அவருக்கு காலமாகும்.

பவார், லாலு பற்றி..
சரத்பவாருடன் இணைந்து செயல்படுவது பற்றி பேசவில்லை.. லாலு கூட எனக்கு நல்ல நண்பர்தான்..

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்?
தேர்தல் என்பது கணக்குகள் அடிப்படையிலானது அல்ல.. நிச்சயம் பாஜக பெரும்பான்மை பெறும். கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் வலுவான கட்சியாக உருவாவோம்.

ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். பாஜக நம்பிக்கையை உருவாக்கி வைத்துள்ளது. நல்ல நிர்வாகத்தையும் வளர்ச்சியையும் பாஜக கொண்டுவரும்.
நரேந்திர மோடி ஏ.பி.பி. செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி
நரேந்திர மோடி ஏ.பி.பி. செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி












Click it and Unblock the Notifications