நிதிஷ்குமார் முதல்வர் பதவி பறிப்பு? பீகாரில் தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும்! உடைத்து பேசிய அமித் ஷா
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இந்த தேர்தலுக்குப் பிறகு என்டிஏ வென்றாலும் கூட நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் தொடர மாட்டார் என்று தகவல் வெளியானது. இது அங்கு அரசியல் அரங்கில் பேசுபொருளான நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாகத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக- ஜேடியு கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே பீகாரில் தேர்தலுக்குப் பிறகு என்டிஏ வென்றாலும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் தொடர மாட்டார் என்றும் பாஜகவில் இருந்தே ஒருவர் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் சொல்லப்பட்டது.

அமித் ஷா
இதற்கிடையே பீகார் தேர்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். என்டிஏ கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள அவர், பீகார் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலேயே கூட்டணி போட்டியிடும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், "பீகாரைப் பொறுத்தவரைத் தேர்தல் முடிந்த பின்னரே முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வோம். பீகாரில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். தேர்தல் முடிவு வெளியாகும்போது அது உங்களுக்குத் தெரியும். எங்கள் முந்தைய சாதனைகளை எல்லாம் இந்த முறை முறியடிக்கும் வகையில் என்டிஏ வெற்றி அமையும்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் முதல்வராக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை என்னால் முடிவு செய்ய முடியாது. இப்போதைக்கு நிதிஷ் குமார் தலைமையில்தான் நாங்கள் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.
2020 தேர்தலுக்குப் பிறகு கூட, நிதிஷ் குமார் தான் பிரதமர் நரேந்திர மோடியை அணுகினார்.. பாஜக அதிக இடங்களைப் பெற்றதால், பாஜக தலைவர் ஒருவரே முதல்வராக வர வேண்டும் என நிதிஷ் குமார் கூறினார். இருப்பினும், நாங்கள் எப்போதும் எங்கள் கூட்டணியை மதிப்போம். நிதிஷ் குமார் மீதான மரியாதை மற்றும் அவரது அனுபவத்தின் அடிப்படையில் அவரே முதல்வராகத் தொடர வேண்டும் என முடிவு செய்தோம்" என்றார்.
கூட்டணியில் மாற்றம்
நிதிஷ் குமார் அடிக்கடி கட்சி மாறுவது குறித்த கேள்விக்கு அமித் ஷா, "அவர் காங்கிரஸுடன் வெறும் 2.5 ஆண்டுகள் மட்டுமே இருந்தார்.. அவரது அரசியல் வாழ்க்கை பெரும்பாலும் காங்கிரஸை எதிர்ப்பதிலேயே இருந்துள்ளது" என்றார். 1974இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தொடங்கிய நிதிஷ்குமார், நாடு தழுவிய அளவில் இந்திரா காந்தி எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்ததாகவும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
நிதிஷ்குமார் உடல்நிலை
நிதிஷ் குமாரின் உடல்நிலை சரியில்லை என பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள். இது குறித்த கேள்விக்குப் பேசிய அமித் ஷா, "நான் பல முறை நிதிஷ்குமாருடன் நேரில் பேசியுள்ளேன்.. தொலைப்பேசியிலும் பேசியுள்ளேன்.. அவரது உடல்நிலை சீராக இருப்பது போலவே எனக்குத் தெரிகிறது. வயது முதிர்ச்சியால் சில சிக்கல்கள் வரலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், முதல்வருடன் சேர்ந்த அவரது அதிகாரிகளும் எல்லா விஷயங்களையும் கையாள்கிறார்கள். இதனால் அது எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை" என்றார்.
தொடர்ந்து மகாமபந்தன் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்த அமித் ஷா, "லாலு பிரசாத் யாதவின் ஆட்சியைப் பீகார் மக்கள் பார்த்துள்ளனர்.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் அதுபோன்ற ஒரு ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணிக் கட்சிகளை எப்போதும் மதிக்காது. எப்போதும் மட்டம் தட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் இப்போது அந்த நிலைக்குப் போய்விட்டது" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications