ஜெ. விடுதலைக்கு 'ஸ்டே..' அரசு வக்கீல் ஆச்சாரியா பரபரப்பு பேட்டி! அப்போ முதல்வர் பதவி?
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவே தொடர உள்ளார். மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை (ஸ்டே) கேட்கப்படும் என்று பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
பெங்களூரில் இதுகுறித்து பி.வி.ஆச்சாரியா அளித்துள்ள பேட்டி: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 மதிப்புக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், இது வருவாயைவிட 10 சதவீதத்துக்குள்ளாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவறுகள் அதிகம்
ஆனால், நீதிபதியின் கணித தவறை திருத்தினால், சுமார் 76 சதவீதம் அளவுக்கு வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக தீர்ப்பிலேயே உள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏகப்பட்ட தவறுகள் அந்த தீர்ப்பில் உள்ளன.

பழைய வரலாறு
919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800க்கும் மேற்பட்ட பக்கங்களில், பழைய காலத்து விவரங்கள்தான் உள்ளன. எஞ்சிய 119 பக்க தீர்ப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எனவேதான், தீர்ப்பை சரி செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக சட்டத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தடை கேட்கப்படும்
எனது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்தது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முதலில் தடை கேட்கப்படும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை பெற்று, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவேன். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

முதல்வர் பதவி
கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புபடி, ஜெயலலிதா குற்றவாளியாகிவிடுவார். எனவே ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க வேண்டிவரும். சிறைவாசத்தில் இருந்து தப்ப உடனடியாக ஜாமீன் கேட்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications