பல நாள் கனவு.. இன்று நிறைவேற செம வாய்ப்பு.. ம.பி முதல்வராகிறாரா சிந்தியா? என்ன நடக்கும்!?
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராகவும் வாய்ப்புகள் கூடி வந்துள்ளது.
Recommended Video
பரபரப்பான மத்திய பிரதேச அரசியல் சூழலுக்கு இடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள்.
மொத்தமாக 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இதை தடுக்கும் பொருட்டு மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

நிலை என்ன
மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் உள்ளனர்,அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.

ராஜினாமா செய்தால்
அங்கு தற்போது 17 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் அதிருப்தி எம்எல்ஏக்களாக மாறி உள்ளனர். இவர்கள் மொத்தமாக பதவி விலக வாய்ப்புள்ளது. தங்கள் எம்எல்ஏ பதவியை இவர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிராதித்யா சிந்தியா அப்படியே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ராஜினாமா செய்தால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 103 ஆக குறையும்.

ஆட்சி கவிழும்
இதனால் மொத்தமாக காங்கிரஸ் ஆட்சி மத்திய பிரதேசத்தில் கவிழும். அதோடு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், அவையின் பலம் 231ல் இருந்து 214 ஆக குறையும். இதனால் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 108 ஆகும். ஆகவே 107 எம்எல்ஏக்கள் உள்ள பாஜக, இன்னும் சில சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்கும். பெரும்பாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பாக ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராக வாய்ப்புள்ளது.

சவுகான் எப்படி
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் இதை எதிர்க்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அவர் மூன்று முறை முதல்வராக இருந்துவிட்டார். இதனால் பெரும்பாலும் அவர் சிந்தியாவிற்கு விட்டுக்கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவருக்கு தேசிய அரசியல் பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

தேர்தலை சந்திப்பார்கள்
அதன்பின் 6 மாதத்திற்குள் தேர்தலை சந்தித்து ஜோதிராதித்யா சிந்தியா எம்எல்ஏ ஆகவும் வாய்ப்புள்ளது. மற்ற 16 எம்எல்ஏக்களும் தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது. இத்தனை மாற்றங்களும் இன்றோ அல்லது நாளையோ மத்திய பிரதேசத்தில் நடக்கும் என்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் முதல்வர் பதவியை சிந்தியா பல நாட்களாக குறி வைத்தார். தற்போது அதற்கான சரியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications