வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வர் ஆவாரா? பாஜகவின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் வந்து விழுந்த கேள்வி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக வெற்றி உறுதி என்கிற அளவில் முடிவுகள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவி வகித்த வசுந்தரா ராஜேவும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர் என்றாலும் இந்த முறை முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என்றால் பெரிய கேள்வி எழுகிறது. பாஜக மேலிடம் இதுவரை யார் ராஜஸ்தான் முதல்வர் என்பதை அறிவிக்கவில்லை..
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி பாஜக ராஜஸ்தானில் 50 இடங்களில் வெற்றி உள்பட 112 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றி உள்பட 69 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதன் மூலம் பாஜக ராஜஸ்தானில் ஆட்சிக்கு வருவது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த கட்சியின் சார்பில் யார் முதல்வராக போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவி வகித்த வசுந்தரா ராஜே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு, தௌசாவில் உள்ள மெஹந்திபூர் பாலாஜி கோவில் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள மோதி தூங்காரி கோவில் உட்பட பல கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபாடு நடத்தினார். அதேநேரம் வகித்த வசுந்தரா ராஜே , ராஜஸ்தான் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக எந்த ஒரு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.. ஏன் யாரையும் முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தவில்லை. அதேநேரம் பாஜக மாநிலத்தலைமையை வழிநடத்தும் பொறுப்பும் வசுந்தரா ராஜேவுக்கு வழங்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, ராஜஸ்தான் பாஜகவில் வசுந்தரா ராஜேவுக்கு செல்வாக்கு குறைக்கப்பட்டு வந்தது. அவருக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவே இல்லை, கட்சிக்குள் அவரது பல போட்டியாளர்கள் மாநிலத்தில் கட்சியின் முகமாக இருக்கிறார்கள்.
தற்போது பாஜக தேசிய துணைத் தலைவராக இருக்கும் வசுந்தரா ராஜே, முதல்வர் ரேஸில் தொடர்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்கிறார்கள்.
தற்போதைய நிலையில் 3வது முறையாக பாஜக ராஜஸ்தானில் அமர உள்ள நிலையில், அந்த மாநிலக் கட்சித் தலைவர் சதீஷ் பூனியா மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சாமியார் பால்க்நாத், தியாகுமாரி ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்
இந்த தேர்தலில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, பாலக் நாத், கிரோடி லால் மீனா என இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வசுந்த்ரா ராஜேவின் விசுவாசிகளின் தொகுதியில் களம் இறக்கப்பட்டனர். இதனால் வசுந்தராவின் விசுவாசிகளில் சிலர் டிக்கெட் மறுக்கப்பட்ட பின்னர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர். இதனால் முதல்வராக வசுந்தரா ராஜே பதவியேற்பாரா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications