50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்... கேரளாவில்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 50 வயதுடைய பெண் ஒருவருக்கு நவீன சிகிச்சைகள் மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.
கேரள மாநிலம் மூவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த சசிதரன் (58), இவரது மனைவி சுஜாதா (50). கடந்த 1987ம் ஆண்டு திருமணமான இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

இது தொடர்பாக இருவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பிறப்பு சிகிச்சை மைய டாக்டர் சபின் சிவதாஸ் என்பவரை இத்தம்பதியினர் சந்தித்தனர்.
அவர், சசிதரன்-சுஜாதா தம்பதியருக்கு குழந்தை பிறப்புக்கான நவீன சிகிச்சைகள் அளித்தார். இதில் சுஜாதா கர்ப்பமானார். அவரது 28-வது திருமண நாளான பிப்ரவரி 1ம் தேதி அவருக்கு பிரசவம் நடந்தது.
இதில், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என சுஜாதாவிற்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன. தாயும், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர். தற்போது குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. பிரசவம் முடிந்ததும், 3 குழந்தைகளையும் அருகே படுக்க வைத்து அவற்றின் முகங்களை உற்றுப்பார்த்து சுஜாதா மகிழ்ச்சி அடைந்தார்.
50 வயதுக்கு பிறகு தனக்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக சுஜாதா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications