குஜராத்தில் விவாகரத்தான பெண்ணை 5 மணி நேரத்தில் 3 முறை சீரழித்த 6 பேர்
சூரத்: குஜராத்தில் 24 வயது விவாகரத்தான பெண்ணை 6 பேர் 5 மணிநேரத்தில் மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள கோசட் நகரைச் சேர்ந்த விவாகரத்தான 24 வயது பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சோனு சிங் என்பவர் வாடகைக்கு வீடு பார்க்க உதவியுள்ளார். இதையடுத்து தற்போது வீடு மாற்ற நினைத்த அந்த பெண் சிங்கின் வீட்டுக்கு சென்று புதிய வீடு வாடகைக்கு பார்க்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் தான் வாங்கிய புதிய காலணிகளை சிங்கின் வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார்.
இதையடுத்து அவர் காலணிகளை எடுத்து வர கடந்த 18ம் தேதி ஷேர் ரிக்ஷாவில் சிங்கின் வீட்டிற்கு கிளம்பினார். இரவு 9 மணி அளவில் பம்பாகேட் பகுதியை அடைந்தபோது ரிக்ஷாவை ஓட்டியவர் அதை நிறுத்தினார். ரிக்ஷா வயலுக்கு அருகில் நிறுத்தப்பட்டது. அந்நேரம் சிங் தனது நண்பர்கள் சந்தீப், மகேஷ் ஜாதியாவுடன் அங்கு பைக்கில் வந்து அந்த பெண்ணை வயலுக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது நண்பர்களும் அப்பெண்ணை பலாத்காரம் செய்தனர்.
சிங் மற்றும் சந்தீப் அந்த பெண்ணை அங்கிருந்து பைக்கில் வேறு ஒரு வயலுக்கு அழைத்துச் சென்று அங்கு மறுபடியும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்படியும் ஓயாத அவர்கள் அவரை சிங்கின் வீட்டுக்கு தூக்கிச் சென்று அங்கு வைத்து மூன்றாவது முறையாக பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு காலை 4 மணிக்கு அந்த பெண்ணை விடுவித்துள்ளனர்.
அப்பெண் 5 மணிநேரத்தில் மூன்று முறை 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் தேடி வருகிறார்கள்.
சோனு சிங், சந்தீப், மகேஷ் ஜாதியா, நிதின் (எ) பப்பு மற்றும் அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications