மாமனார், கணவரின் நண்பர் பலாத்காரம் செய்துவிட்டனர்: பெண் புகார்
டெல்லி: டெல்லியில் 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னை மாமனாரும், கணவரின் நண்பரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள கோவிந்த்புரியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவரை ஓராண்டுக்கு முன்பு அவரது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து இந்த ஆண்டு தான் கணவரின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அவரை அவரது கணவர் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது நண்பர் சோனுவை(32) அந்த பெண்ணுக்கு அவரது கணவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த நபர் அப்பெண்ணை கடந்த மாதம் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் மாமனார் மற்றும் சோனு மீது புகார் கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மாமனார் ஓராண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் என் கணவரின் நண்பரான சோனு(32) என்னை கடந்த மார்ச் மாதம் பலாத்காரம் செய்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications