Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிபன் கேட்டதுக்கு இப்படியாம்மா 'கடிப்பே'?... மருத்துவமனையில் கணவர்!!

Subscribe to Oneindia Tamil

போபால்: டிபன் சமைத்து தர கேட்ட கணவனின் இம்சையை பொறுக்க முடியாமல், கணவனின் ஆணுறுப்பை கடித்த மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் சான்டா மாவட்டத்தின் பகரா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர பட்டேல் (30). இவரது மனைவி உமா (27). இவர்கள் இருவருக்கும் 2010ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஓரிரு ஆண்டுகள் ஒழுங்காக சென்ற கணவன், மனைவி உறவு, அதன்பிறகு சண்டையும், சச்சரவுமாக மாறியது. கடந்த மே 4ம்தேதி இரவு கணவன், மனைவி வழக்கம்போல சண்டை போட்டுக் கொண்டனர்.

இந்த தகராறு நடந்த மறுநாள், காலையில் ஜிதேந்திரா குளிக்க சென்றுள்ளார். அப்போது டிபன் ரெடி பண்ணுமாறும், அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றும் மனைவி காதில் விழுமாறு கூறிவிட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது உமா ஜாலியாக உட்கார்ந்திருந்தாரே தவிர டிபன் செய்யவில்லை.

இதையடுத்து ஜிதேந்திராவே கிச்சனுக்கு சென்று தனக்கு தெரிந்த டிபனை செய்ய ஆரம்பித்துள்ளார். தன்னிடம் கெஞ்சி டிபன் செய்ய சொல்லாமல், அவர் இஷ்டத்துக்கு சமையலறைக்குள் சென்று சமையல் செய்கிறாரே என்ற ஆத்திரம் உமாவுக்கு வந்துள்ளது. கிச்சனுக்குள் புகுந்து ஜிதேந்திராவை வெளியே போகுமாறு வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜிதேந்திரா சத்தம் போட்டு பேசியுள்ளார். அப்படி தம் கட்டி கத்தியதால் குளித்துவிட்டு இடுப்பில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து கீழே விழுந்தது. ஜட்டி அணியாததால், உமா முன்பு நிர்வாணமாக நின்றுள்ளார் ஜிதேந்திரா. அப்போது உமாவுக்கு தனது ஆத்திரத்தை காட்ட நல்ல இடம் கிடைத்துவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது.

கணவன் குனிந்து துண்டை எடுக்கும் முன்பாக, ஓடிச் சென்று அவரின் விரைப்பையை ஒரு கையால் இறுக்கி பிடித்துக் கொண்ட, உமா பலமாக கடித்துள்ளார். வலியால் துடித்த ஜிதேந்திரா, எப்படியோ உமாவை பிடித்து தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த போதிலும், டாக்டரிடம் ஆணுறுப்பை காண்பித்து மருந்து போட ஜிதேந்திரா தயங்கி வந்தார்.

வலியை தாங்க முடியாமல், தவித்த ஜிதேந்திரா தனது நெருங்கிய நண்பனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அந்த நண்பரும் ஏதோ நாட்டு மருந்துகளை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கும் வலி கட்டுப்படவில்லையாம். சமீப நாட்களாக ஆணுறுப்பு பெரிதாக வீங்கியதுடன், பூஞ்சைகளும் தோன்றியுள்ளது. பயந்துபோன ஜிதேந்திரா, ஊர் பெரியவர்களிடம் ஐடியா கேட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையொன்றில் ஜிதேந்திரா தனது ஆணுறுப்பு காயத்துக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டதால் ஆணுறுப்பில் பாதிப்பு அதிகரித்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் இன்று ஜிதேந்திராவின் ஆணுறுப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். காயம் குணமடைந்த பிறகுதான் ஆணுறுப்பை முழு பயன்பாடுக்கு உட்படுத்த முடியும், அதுவரை சிறுநீர் மட்டும் கழித்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே உமா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+