வரதட்சணையாக கார் கேட்ட மாப்பிள்ளை... போலீஸில் புகார் செய்து திருமணத்தை நிறுத்திய மணமகள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வரதட்சணையாக கார் தர வேண்டும் என மணமகன் கட்டாயப் படுத்தியதால், திருமணத்தை நிறுத்திய மணமகள், இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பதேஹ்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது வரதட்சணையாக மணமகன் வீட்டார் கேட்ட, டூ - வீலர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அளிப்பதாக மணமகள் வீட்டார் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து வந்தது.

இந்நிலையில், மணமகளின் தந்தையை தன் வீட்டுக்கு அழைத்த மணமகன், தனக்கு, டூ - வீலர் வேண்டாம் என்றும், தன் பெற்றோர் விருப்பப்படி, கார் வாங்கித் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், தன்னிடம் கார் வாங்கித் தரும் அளவுக்கு பண வசதியில்லை' என மணமகளின் தந்தை கூறியுள்ளார். ஆனால், கார் வாங்கித் தந்தால் மட்டுமே திருமணம் என மாப்பிள்ளை வீட்டார் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார் மணமகளின் தந்தை. நடந்த சம்பவங்களை தந்தை மூலம் அறிந்து கொண்ட மணமகள், திருமணத்தை நிறுத்தினார். அதோடு மாப்பிள்ளை வீட்டார் மீது போலீஸ் ஸ்டேஷனிலும் அவர் வரதட்சணை புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications