பெங்களூரில் மடத்தில் உள்ள கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள உத்தராதி மடத்தில் உள்ள கிணற்றில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தால் நேராக சொர்க்கம் செல்லலாம் என்று நினைத்து தற்கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(45). 1990ம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். கணவரை பிரிந்த சீதாலட்சுமி தனது சகோதரர் விஸ்வநாத்தின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமான அவரின் அக்கா கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பலியானார்.

அக்கா இறந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் மனோநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தால் நேராக சொர்க்கம் செல்லலாம் என்று நினைத்து சகோதரருக்கு தெரியாமல் நைட்டியிலேயே பெங்களூரில் உள்ள உத்தராதி மடத்திற்கு வந்தார்.
வைகுண்ட ஏகாதசி அன்று மதியம் 3 மணி அளவில் பொது தொலைப்பேசியில் இருந்து உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் இதை விஸ்வநாத்திடம் தெரிவிக்குமாறும் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அந்த உறவினர் மீண்டும் அதே எண்ணை தொடர்பு கொண்டபோது தான் அது உத்தராதி மடத்திற்கு அருகில் உள்ள பொது தொலைப்பேசி என்று தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த விஸ்வநாத் பெங்களூருக்கு கிளம்பினார். இதற்கிடையே மடத்திற்கு சென்ற சீதாலட்சுமி கிணற்றில் குதிக்க சென்றார். அங்கு ஆட்கள் இருந்ததால் அங்கும் இங்குமாக நடந்து பின்னர் அவர்கள் சென்ற பிறகு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
போலீசார் வந்து சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூர் வந்த விஸ்வநாத் மருத்துவமனைக்கு சென்று தனது சகோதரியின் உடலை அடையாளம் காட்டினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications