முதலிரவிலேயே விவாகரத்து.. 20வது நிமிடம் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்! உறைந்துபோன உறவினர்கள்
லக்னோ: இந்தியாவில் திருமணம் என்பது இரு நபர்களைத் தாண்டி இரு குடும்பங்கள் தொடர்பானது. ஒருவரது வாழ்க்கையிலேயே திருமணம் தான் முக்கிய நாளாகக் கருதப்படுவதால் அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். ஆனால், அதிலும் கூட பல வினோதங்கள் நடக்கும். அப்படித் தான் இங்குப் பெண் ஒருவர் திருமணம் நடந்து வெறும் 20 நிமிடங்களில் தனது கணவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளார்.
நமது நாட்டில் திருமணங்கள் எப்போதுமே பிரம்மாண்டமாகப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். ஆனாலும் கூட இந்த காலத்தில் பல திருமண உறவுகள் நீடிப்பதில்லை. இதற்கிடையே அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள தியோரியா மாவட்டத்தில் வெகு விமர்சையாக திருமணம் ஒன்று நடந்தது.

திருமணம்
ஊரே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக இந்தக் கல்யாணம் நடந்தது. இருப்பினும், திருமணம் முடிந்து, மணமகன் வீட்டிற்கு அந்தத் தம்பதி சென்ற சில நிமிடங்களிலேயே அந்தத் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது..
பாலூவானியில் தனது தந்தையுடன் மளிகைக் கடை நடத்தி வந்த விஷால் மதேஷியா என்பவருக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது. அவர் சலேம்பூரைச் சேர்ந்த பூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருமண ஊர்வலமும் சிறப்பாக நடந்தது.
20வது நிமிடம் அதிர்ச்சி
ஊர்வலம் முடிந்து அந்தத் தம்பதி வீட்டை அடைந்தது. வரவேற்பு உபசரிப்புகளுக்குப் பிறகு, இரவு அனைத்துத் திருமணச் சடங்குகளும் முறைப்படி நிறைவடைந்தன.. பிறகு மணமக்களை முதலிரவுக்காக அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அடுத்த 20ஆவது நிமிடம் அறையில் இருந்து வெளியே வந்த பூஜா, கணவருடன் வாழ விரும்பவில்லை எனக் கூறினார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அனைவரும் கூடியிருந்த நிலையில், அங்கேயே கணவருடன் வாழ விருப்பமில்லை எனச் சத்தமிட்டுள்ளார்.
முதலில் அங்கிருந்த அனைவரும் அந்தப் பெண் ஏதோ ஜோக் செய்கிறார் என்றே நினைத்தனர். இருப்பினும், அந்தப் பெண் திரும்பத் திரும்ப அதையே சொன்ன பிறகே அவர் சீரிஸயாக சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். ஏன் என்னாச்சு என கேட்டபோதும் அந்தப் பெண் பதில் சொல்லாமல் மவுனம் காத்துள்ளார். தனது அம்மா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என அடம்பிடித்துள்ளார். மணமகன் குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.
அடம்பிடித்த பெண்
யார் என்ன சொன்னாலும், "என் பெற்றோருக்குக் கால் செய்யுங்கள்.. நான் இங்கே வாழ மாட்டேன்" என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் பூஜாவின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த பூஜாவின் பெற்றோர், அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அந்தப் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். ஏன் இந்த முடிவு என்ற காரணத்தையும் அவர் விளக்கவில்லை.
பிரிந்து வாழ முடிவு
இதையடுத்து பஞ்சாயத்தைக் கூட்டி இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளனர். சுமார் 5 மணி நேரம் இந்த விவாதம் நடந்துள்ளது. இருப்பினும், ஒருமித்த தீர்வு எட்டப்படவில்லை. இதனால் அந்தப் பெண்ணை தாய் வீட்டிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும், திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் முடிவுக்கு வருவதாக ஒப்பந்தம் போட்டனர். திருமணத்தின்போது பரிமாறப்பட்ட அனைத்துப் பரிசுகளையும், பணத்தையும் திரும்பத் தரவும் பஞ்சாயத்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பூஜா தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார்.
இது தொடர்பாக விஷால் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு பூஜா திருமணத்திற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.. சாதாரணமாகவே பேசினார்.. அவரது திடீர் மனமாற்றம், இரு குடும்பங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் இந்த சம்பவம் குறித்து போலீசில் எந்தவொரு புகாரையும் பதிவு செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்றார். இந்தச் சம்பவம் இணையத்தில் செல்நெறியாகும் நிலையில், பலரும் இது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications