சத்து மாத்திரையின் கேப்ஸ்யூலுக்குள் செத்துக்கிடந்த கொசு: அதிர்ச்சி அடைந்த பெண்
டெல்லி: ரம்யா வெங்கட் என்பவர் தான் உண்ணவிருந்த கேப்சுலில் இறந்த கொசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரம்யா வெங்கட் என்பவர் கர்ப்பமாக இருந்தபோது அவரை எம்.ஏ. டி.ஹெச்.ஏ. கேப்சுல்களை எடுத்துக் கொள்ளுமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரும் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகும் அந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Woman finds dead mosquito in capsule http://t.co/0GkwqhwvEk pic.twitter.com/mKs0OEOviX
— TheNewsMinute (@thenewsminute) July 8, 2015 அதனால் அவர் அந்த சத்து மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் 13ம் தேதி அவர் எம்.ஏ. டி.ஹெச்.ஏ. கேப்சுல்களை மருந்தகத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார். ஒரு நாள் வழக்கம் போல மாத்திரையை உட்கொள்ளும் முன்பு அதை பார்த்தபோது கேப்சுலுக்குள் இறந்த கொசு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த கேப்சுலை புகைப்படம் எடுத்து அதை தயாரித்த நிறுவனமான நோவோ மெடிக்கமென்ட் பிரைவேட் லிமிடெட்டுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்தார். அவர்கள் புகைப்படத்தை பார்த்துவிட்டு கேப்சுலுக்குள் ஏதோ கருப்பாக இருக்கிறது, எங்கள் ஆளை அனுப்பி வைக்கிறோம். அவர் ஆய்வு செய்து அது என்னவென்பதை கண்டுபிடிப்பார் என்று பதில் அனுப்பியது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ரம்யாவின் வீட்டிற்கு வந்து கேப்சுலை ஆய்வு செய்து அதற்குள் இருப்பது இறந்த கொசு தான் என்பதை உறுதி செய்தார். மருந்து நிறுவனமோ கொஞ்சமும் வருத்தப்படாமல் இதற்கு பதில் வேறு டப்பா கேப்சுலை வழங்கியுள்ளது.
கொசு இருந்த கேப்சுலுக்கு பதில் வேறு கேப்சுல் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? மருந்து தயாரிப்பாளரின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரம்யா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications