காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்... ரூ 5,000 திருட்டு - இது டெல்லியில்!

அடுத்தடுத்து நாடு முழுவதும் நடந்து வரும் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களால் மக்கள் குறிப்பாக பெண்கள் அதிர்ந்து போயுள்ளனர். சிறு குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாரபட்சமில்லாமல் காமக் கொடூரர்களால் சூறையாடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உத்திரப்பிரதேசத்திலுள்ள மதுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் குர்கான் போய் விட்டு நேற்றிரவு காரில் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை 8 அருகே அவரது கார் பயணித்துக் கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பலொன்று அவரது காரை வழிமறித்துள்ளது. துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணத்தையும் பிடிங்கிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்து வரும் போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் தொடரும் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஓடும் காரை வழிமறித்து பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இரவு நேரங்களில் வாகனங்களில் பயணம் மேற்கொள்வோரை மேலும் பீதியடைய வைத்திருக்கிறது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications