இளம்பெண்ணை கேங் ரேப் செய்த 3 பேர்... சினிமா போல கிளைமேக்சில் வந்து கைது செய்த போலீஸ்!
மும்பை: மும்பையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களை, சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.
பணி முடிந்து வீடு திரும்புவதற்காக 21 வயது இளம்பெண் ஒருவர், மும்பை ரே சாலை ரயில்நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ளார். அப்போது அவருடன் பேச்சு கொடுத்துள்ளனர் சலீம் ஷேக் உள்ளிட்ட மூன்று ஆண்கள். ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாததால், அப்பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது தங்களது கடமை என அவர்கள் வாக்குறுதியும் கொடுத்துள்ளனர்.

அம்மூவரின் பேச்சை நம்பிய அப்பெண், அவர்களுடன் சேர்ந்து வேறு பயணிகள் யாருமே இல்லாத ரயில் பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் காட்டன் கிரீன் ரயில் நிலையத்தைச் சென்றடைந்த போது அப்பெண்ணை மிரட்டி கீழே இறங்கச் செய்துள்ளது அந்தக் கும்பல்.
பின்னர், மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக இரவு ரோந்து சென்ற போலீசார், அப்பெண்ணின் அழுகுரல் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தப்பியோட முற்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸ், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் முந்தைய வழக்குகள் எதுவும் இல்லை என்றும், கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் வரும் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications