நான் போயிடுறேன்.. கெஞ்சும் பெண் நிருபர்.. காரை அடித்து உடைக்கும் போராட்டக்காரர்கள்! திக் திக் காட்சி
Recommended Video

பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரிப்போர்ட்டிங் செய்ய சென்ற பிரபல ஆங்கில செய்தி சேனலின் பெண் நிருபர், திரளான பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி தாக்குதலுக்கு உள்ளான திக் திக் காட்சிகள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் முதல் முறையாக நேற்று திறக்கப்பட்டது.
இதையடுத்து பெண்கள் சிலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.
[போராட்டங்கள் வலுத்த நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு!]

தடுத்து நிறுத்தம்
இவர்களை நிலக்கல் பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பெண் பத்திரிகையாளர்கள் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. பல ஆங்கில டிவி சேனல்களும் பெண் நிருபர்களை கள நிலவரத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது. அப்படி ஒரு ஆங்கில செய்தி, சேனலின் நிருபரான ராதிகா ராமசாமி, நேற்று நிலக்கல் பகுதியில் காரில் சென்றார். அவர் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தடுத்தனர்.

போதிய போலீஸ் இல்லை
அந்த இடத்தில் போலீசார் சிறு அளவிலேயே இருந்தனர். அவர்கள் பெண் பத்திரிகையாளரை திரும்பி போக கூறினர். அதற்குள்ளாக மேலும் பல போராட்டக்காரர்கள் அங்கு சூழ்ந்தனர். அவர்கள் காரை அடிக்க ஆரம்பித்தனர். சிலர் கார் கண்ணாடியை உடைத்தனர்.

போய்விடுகிறேன்
இதையடுத்து அந்த பெண் அச்சமுற்றார். நான் போகிறேன், நான் போகிறேன் என்று மலையாளத்தில் கூறினார். ஆனால் இதை போராட்டக்காரர்கள் காதில் கேட்க தயாராக இல்லை. அவர்கள் காரை அடிக்கும் சத்தம், வீடியோவில் கேட்பவர்களையே திகில் கொள்ளச் செய்யும். கார் சீட் பெல்டை கழற்றிவிட்டு, அந்த பத்திரிகையாளர் தங்களை தாக்க வேண்டாம் என்று கெஞ்சுவதை போல இந்த வீடியோ உள்ளது.
|
டிவிட்டரில் வீடியோ
அந்த பெண் பத்திரிகையாளர் பயணித்த கார் சேதம் அடைந்தாலும் கூட ஒருவழியாக பாதுகாப்பாக அவர் பின்னால் அழைத்துச் செல்லப்பட்டு வெளியேறினார். ராதிகா ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications